மஹாராஷ்டிராவுக்கு ரயிலில் கடத்தப்பட்ட 163 சிறுவர்கள் மத்திய பிரதேசத்தில் மீட்பு
போபால்: பீஹாரில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு ரயிலில் கடத்தப்பட்ட 163 சி றுவர்களை, மத்திய பிரதேசத்தில் ரயில்வே போலீசார் மீட்டனர். அவர்களை கடத்தி சென்றதாக எட்டு பேரை கைது செய்தனர்.
பீஹாரில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு கூலி வேலைகளில் ஈடுபடுத்த, சிறுவர்களை ரயிலில் சிலர் கடத்தி செல்வதாக, குழந்தைகள் நல அதிகாரிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, பாட்னா - புர்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் சிறுவர்களை மீட்பதற்காக, ம.பி.,யின் கட்னி ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு ரயில்வே பாதுகாப்பு படையினரும், போலீசாரும் காத்திருந்தனர்.
ஐந்தாவது நடை மேடையில் ரயில் வந்ததும், 163 சிறுவர்களுடன் வந்த எட்டு பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது, டிக்கெட் இல்லாமல் சிறுவர்களை அழைத்து வந்தது தெரிய வந்தது. 6 - 13 வயதுடைய அந்த சிறுவர்கள், பீஹாரின் அராரியாவில் இருந்து மஹாராஷ்டிராவின் லத்துாருக்கு வேலைக்காக அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
சிறுவர்களை மீட்ட போலீசார், சந்தேகத்துக்குரிய எட்டு பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
சிறுவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு ஒப்படைப்பதற்கான பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்த மூன்று மாநிலங்களிலும் டபிள் எஞ்சின் சர்க்கார் தானே நடக்கிறது, அதனால் தானோ என்னவோ!