லாரி டிரைவர் துாங்கியதால் விபத்து: சாலையில் நின்றிருந்த 5 பேர் பலி
டின்டோரி: மத் திய பிரதேசத்தின் டின்டோரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில், ஐந்து பேர் பலியாகினர்.
மத்திய பிரதேசத்தின் டின்டோரி மாவட்டத்தின் கடசராய் அருகே, ஜபல்பூர் - அமர்கண்டக் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சரக்கு வேன் ஒன்றில் சிலர் பயணித்தனர். அப்போது டயர் பஞ்சரானதால், அதை மாற்றும் பணியில் அதன் டிரைவர் ஈடுபட்டிருந்தார்.
இதனால், அதில் பயணித்தவர்கள் சாலையில் இறங்கி நின்றிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த லாரி, சரக்கு வேன் அருகே நின்றிருந்த பயணியர் மீது மோதியது.
இதில், சரக்கு வாகன டிரைவர் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; ஒருவர் காயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு, அ ருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை க்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதையடுத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி டிரைவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், துாக்க கலக்கத்தில் வண்டியை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார்.
மேலும்
-
இந்திய பத்திர சந்தைக்கு 'செக்' வைக்கும் பணவீக்கம்
-
'பிபா உலக கோப்பை' புதிய கிரெடிட் கார்டு
-
பங்குகளிலிருந்து பத்திரங்களுக்கு மாறிய தனியார் நிறுவனங்களின் முதலீடுகள்
-
ஆறு மடங்கு அதிகரித்த கோல்டு இ.டி.எப்., முதலீடு
-
அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் பேச்சு! பரிசீலனையில் உள்ளது 2 இடங்கள்
-
தங்க பத்திர முதலீடு 302% லாபம்