மூலநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், நாளை (15ம் தேதி) புதன் பிரதோஷ வழிபாடு நடக்கிறது.
பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவிலில், நாளை 15ம் தேதி பிரதோஷ சிறப்பு பூஜை நடக்கிறது. அதனையொட்டி, காலை 9.00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு பிரதோஷ பூஜை நடக்கிறது.
இதில், கோவில் கொடி மரம் எதிரே, வடக்கு திசை நோக்கி செவி சாய்த்து அருள் பாலிக்கும் செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது.
ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர்கள் செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நிலக்கரி எக்ஸ்சேஞ்ச் துவங்க என்.எஸ்.இ., கேட்ட பெயர் 'ஓகே'
-
எண்ணெய் நிறுவன பங்குகள் 6% சரிவு
-
நிப்டி 24,100 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது
-
க்யு.ஐ.பி., விலைக்கான விதிகள் மாற்ற 'செபி'யிடம் கோரிக்கை
-
பவள ஒளியில் ஒளிரும் 'தினமலர்'
-
உள்நாட்டில் உருவான பிரம்மோஸ் ஏவுகணை ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைப்பு
Advertisement
Advertisement