நிப்டி 24,100 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது


நிப்டி

கணிசமான இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, சிறிது சிறிதாக இறக்கத்தில் இருந்து மீண்டு நாளின் இறுதியில் 207 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. 16 பறந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி மைக்ரோகேப் 250 குறியீடு, குறைந்தபட்சமாக 0.04 சதவீத இறக்கத்துடனும், நிப்டி இந்தியா எப்.பி.ஐ.,150 குறியீடு அதிகபட்சமாக 0.85 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
இவற்றில் நிப்டி மெட்டல் குறியீடு குறைந்தபட்சமாக 0.22 சதவீத இறக்கத்துடனும், நிப்டி ஆட்டோ குறியீடு, அதிகபட்சமாக 2.09 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,325 பங்குகளில் 1,306 ஏற்றத்துடனும் 1,928 இறக்கத்துடனும், 91 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

நிப்டி 14 மற்றும் 21 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.) மேலே நிறைவடைந்திருப்பது ஏற்றத்திற்கான மொமெண்டம் மீதம் இருக்கின்றது என்பதையே காட்டுகின்றது. எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.ஓ.சி.,யும் அனுகூலமான சூழ்நிலைகள் உருவானால் ஏற்றம் வந்துவிடக்கூடிய நிலைமை இருப்பதையே காட்டுகிறது.

இருப்பினும், ஆர்.எஸ்.ஐ., நியுட்ரலாகவும் ஸ்டொக்காஸ்டிக் ஓவர்பாட்டாகவும் இருப்பது குறுகிய கால அளவில் கன்சாலிடேஷன் நடக்க வாய்ப்புள்ளது என்பதை கோடிட்டு காட்டுகிறது. தற்போதைய சூழலில் 23,400ல் முக்கிய சப்போர்ட்டும், 24,250ல் முக்கிய ரெசிஸ்டென்ஸும் இருக்கிறது. செய்திகள் சாதகமாக இருந்தால் 24,100 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.



ஆதரவு 23,625 23,400 23,275

தடுப்பு 23,975 24,100 24,250







Advertisement