சென்டர் மீடியன் உடைப்புக்கு நிரந்தர தீர்வு தேவை: 1.5 மீட்டர் உயரத்திற்கு கான்கிரீட் கட்டை அமைக்கப்படுமா?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் உடைக்கப்பட்டுள்ள இடங்களில் 1.5 மீட்டர் உயரத்திற்கு கான்கிரீட்டால் ஆன தடுப்புக் கட்டை அமைத்து நகாய் அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு, செடிகள் வளர்க்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியவாறு உள்ள கிராம மக்கள் சாலையின் குறுக்கே கடந்து செல்வதற்காக 2 அல்லது 3 கி.மீ., தொலைவிற்கு ஒரு இடத்தில் சென்டர் மீடியன் தடுப்புக் கட்டையை உடைத்து இடைவெளி ஏற்படுத்தி அந்த வழியாக ஆபத்தான நிலையில் நெடுஞ்சாலையை குறுக்காக கடக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த வினைதீர்த்தாபுரத்தில் முக்கால் அடி உயர சென்டர் மீடியன் தடுப்புச்சுவரை உடைத் து சாலையின் குறுக்கே வாகன ஒட்டிகள் கடந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் விபத்து அபாயம் இருந்தது.
இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து நகாய் அதிகாரிகள் உடைந்த சென்டர் மீடியன் தடுப்புக் கட்டையை உடனடியாக சரி செய்தனர். இதில் ஏற்கனவே இருந்த உயரத்திற்கு மீண்டும் தடுப்பு அமைத்துள்ளனர்.
இவ்வாறு செய்வதால் வாகன ஓட்டிகள் சில நாட்களுக்கு மட்டுமே விதிமுறையை பின்பற்றி சரியான திசையில் செல்வர். அதன் பிறகு மீண்டும் சீரமைக்கப்பட்ட இடத்தை உடைத்து கடந்து செல்ல துவங்குவர்.
இதனைத் தவிர்க்க 'நகாய்' அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை முழுதும் முறையாக கண்காணித்து இதுபோன்று உடைக்கப்பட்டு வழி ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களில் 1.5 மீட்டர் உயரத்திற்கு கான்கிரீட்டாலான தடுப்புக் கட்டை அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வாக அமையும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? இன்று மாலை வெளியாகிறது Exit Polls
-
'போர்வெல்' பணி தடுத்து நிறுத்தம்
-
நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
-
கல்குவாரிகளில் இருந்து எம்.சாண்ட் ஏற்றிய 30 லாரிகள் 5 மணி நேரம் சிறைபிடிப்பு
-
சித்தர் சிறப்பு திருவிழாவில் களி படைத்து வழிபாடு
-
3 கோவில்களில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்