3 கோவில்களில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்

சேலம், சேலம், அம்மாபேட்டை சுப்ரமணியர் கோவிலில், செங்குந்தர் மீனாட்சி - சொக்கநாதர் திருமண வைபவ குழு சார்பில், திருக்கல்யாண வைபவ விழா நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை, பரிமள ரங்கநாதர் கோவிலில் இருந்து, திருமண நிச்சயதார்த்த சீர்வரிசை ஊர்வலம், மேள தாளம் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக, சுப்ரமணியர் கோவிலுக்கு வந்தது.அங்கு பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிேஷகம் செய்து சர்வ அலங்காரத்துடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.


நேற்று காலை, 9:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம், பன்னிரு திருமுறை பாராணயத்துடன் தொடங்கியது. மகா மண்டபத்துக்கு சர்வ அலங்காரத்துடன் பிரியாவிடை அம்மனுடன் சொக்கநாதர் எழுந்தருளினார்.
தொடர்ந்து மணமகள் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். சிவாச்
சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, திருமண சடங்குகளை முறைப்படி நடத்தி மணமக்களுக்கு காப்பு கட்டினர்.
தொடர்ந்து திருமாங்கல்யத்துக்கு சிறப்பு யாக பூஜை செய்து, திரளான பக்தர்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள், சொக்கநாதர் கரத்தில் மாங்கல்யத்தை தொட்டு, மீனாட்சி அம்மன் கழுத்தில் அணிவித்தனர். தொடர்ந்து பிரியாவிடை அம்மனுக்கும் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
மாலை மாற்றும் வைபவம் நடந்த பின் பக்தர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. மாலையில் பன்னிரு திருமுறை மன்றம் சார்பில் திருக்கைலாய வாத்தியங்கள் முழங்க பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது. இன்று மாலை, 6:00 மணிக்கு மீனாட்சி - சொக்கநாதர் அபிேஷகம், வசந்த உற்சவத்துடன், திருவிழா நிறைவு பெறும்.
அண்ணாமலையார் கோவில்

சித்திரை திருவிழாவையொட்டி, ஆத்துார் அருகே கல்லாநத்தம், முட்டல் வழியில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் திருக்கல்யாண பூஜை நடந்தது. அதில் வழிபாடு செய்தவர்களுக்கு திருமண சீர்வரிசை பூக்கள், பழங்கள், மஞ்சள்க்கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


சென்னகேசவ பெருமாள்
சங்ககிரி மலை மீதுள்ள சென்ன
கேசவ பெருமாள் கோவில் சித்திரை தேரோட்ட விழா கடந்த, 22ல் தொடங்கியது. அதன், 7ம் நாளான நேற்று, பெண் அழைப்பு நடந்து, சுவாமிகளுக்கு மலர்மாலை மாற்றப்பட்டது.
பட்டாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத சென்னகேசவப்
பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் பல்வேறு வகை சீர்வரிசை தட்டுகள் வைத்தும், சுவாமிகளின் பெயருக்கு மொய் பணம் எழுதியும் பக்தர்கள் வழிபட்டு சென்றார்கள்.

Advertisement