படிக்கட்டில் கால் இடறி கீழே விழுந்த பெண் பலி

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அருகே, மாடி படிக்கட்டில் கால் இடறி கீழே விழுந்த பெண், பரிதாபமாக உயிரிழந்தார்.

கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு, ஆர்.ஆர்.அவென்யூ குடியிருப்பை சேர்ந்தவர் சுதா, 32. இவர் மறைமலை நகரில் உள்ள டி.வி.எஸ்., நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நான்காம் தளத்தில் உள்ள தன் வீட்டிலிருந்து, படிக்கட்டு வழியாக கீழே இறங்கினார்.

அப்போது, கால் இடறி, கீழே விழுந்து, பலத்த காயமடைந்தார்.

அங்கிருந்தோர் சுதாவை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, சுதா ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement