பைக் - கார் மோதல் 2 பெண்கள் உயிரிழப்பு
பண்ருட்டி: பண்ருட்டி அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில், இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
கடலுார் மாவட்டம், காடாம்புலியூர் பெரியபுறங்கனியை சேர்ந்தவர் அருள், 45; விவசாயி.
இவர், நேற்று காலை 8:30 மணியளவில், தன் முந்திரித்தோப்பில் , முந்திரி கொட்டை அறுவடை செய்ய, ஒறையூரை சேர்ந்த மல்லிகா, 32, ரஞ்சிதா, 35, ஆகிய இருவரை, தன் பைக்கில் அழைத்துக்கொண்டு, கீழக்கொல்லை நோக்கி சென்றார்.

வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில், கீழக்கொல்லை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார், இவர்கள் பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே மல்லிகா, ரஞ்சிதா உயிரிழந்தனர். அருள், பலத்த காயமடைந்தார்.
முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நமஸ்தே... மேரா பாபா மர்கயா!
-
டில்லியில் தீ விபத்து; 9 பேர் உயிரிழப்பு
-
தயாரிப்பாளர் சங்கம் 'ஸ்டிரைக்'; படப்பிடிப்புகள் பாதிப்பு
-
நாடு முழுவதும் நீட் தேர்வு முதல் பொறியியல் படிப்பு கலந்தாய்வு விண்ணப்பம் துவக்கம் வரை; இன்று (மே 3) முக்கிய நிகழ்வுகள்!
-
நாளை தேர்தல் முடிவுகள் அறிய தினமலர்.காம் பாருங்கள்
-
தினமலர் இணையதளத்தில் பிரத்யேக ஏற்பாடு
Advertisement
Advertisement