மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் ‌திறப்பு நிறுத்தம்

தேவதானப்பட்டி, மே 6--–

தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மஞ்சளாறு அணையில் இருந்து 4 நாட்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

தமிழக அரசு உத்தரவில் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையிலிருந்து தேனி மாவட்ட பகுதியான தேவதானப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்ட பகுதியான தும்மலப்பட்டி மற்றும் வத்தலகுண்டு முதல் சிவஞானபுரம் வரையில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஏப்.,30ல் தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு நாட்களுக்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம்(மே3) இரவு நிறுத்தப்பட்டது.

--

Advertisement