உடைகிறதா அதிமுக?: எம்எல்ஏ கூட்டத்தை தள்ளிவைத்தார் இபிஎஸ்
நமது சிறப்பு நிருபர்
சென்னை: தவெக.,விற்கு ஆதரவளிக்கக் கோரி அதிமுக கட்சிக்குள் சீனியர் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், அக்கட்சி உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று (மே 6) நடைபெற இருந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தை தள்ளி வைத்துள்ளார் பழனிசாமி.
தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வென்றது. திமுக கூட்டணி 73 இடங்களும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க தவெக.,விற்கு பெரும்பான்மை இடங்கள் இல்லாததால் திமுக கூட்டணி கட்சிகள் அல்லது அதிமுக கூட்டணி கட்சிகள் அல்லது அதிமுக.,வின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறது தவெக.
அதிமுக கைவசம் உள்ள 47 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு மட்டும் இருந்தாலே விஜயின் தவெக., ஆட்சி அமைக்கவோ, 5 ஆண்டுகள் நீடிக்கவோ எந்த பிரச்னையும் எழாது.
இந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை முடிந்த மே 4ம் தேதியே பெரும்பான்மை கிடைக்காததால் அதிமுக.,வை உடைக்க செங்கோட்டையன் தலைமையில் திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையறிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக.,விற்கு வெளியில் இருந்து ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் தரப்பில் தவெக.,விற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.
அதில் முக்கியமானது தவெக.,வின் அமைச்சரவையில் செங்கோட்டையன் இடம்பெற கூடாது என நிபந்தனை விதித்தாராம் பழனிசாமி. அதற்கும் ஓகே சொன்ன தவெக, செங்கோட்டையனுக்கு சபாநாயகர் பதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது. அதனை ஏற்க மறுத்த பழனிசாமி, செங்கோட்டையன் வெறும் எம்எல்ஏ.,வாக மட்டுமே தொடர வேண்டும், சபாநாயகர், அமைச்சர் என எந்த பதவியையும் அளிக்க கூடாது என்றாராம்.
அதற்கு தவெக தரப்பில், ''நீங்கள் சொல்வதை கேட்க நாங்கள் பா.ஜ., அல்ல, இது தவெக, நாங்கள் இப்படித்தான் முடிவெடுத்துள்ளோம்'' என ஆணித்தரமாக கூறியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத பழனிசாமி, தவெக.,விற்கு ஆதரவளிப்பதில் இருந்து பின்வாங்கியுள்ளார். ஆனால், அதிமுக சீனியர்களான சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர், 'செங்கோட்டையனுக்கு பதவியளிப்பது அவர்களின் கட்சி பிரச்னை, நாம் தலையிட தேவையில்லை. ஆதரவளிப்போம்' என்றனர். இதற்கு பழனிசாமி சம்மதிக்கவில்லை.
இதன் காரணமாக செங்கோட்டையன் தரப்பு முன்னரே திட்டம் தீட்டியதுபோல, வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோரின் தலைமையில் அதிமுக.,வை இரண்டாக உடைத்து சில எம்எல்ஏ.,க்களுடன் தவெக.,விற்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாகவே, இன்று நடைபெற இருந்த அதிமுக எம்எல்ஏ கூட்டத்தையும் தள்ளிவைத்துள்ளார் பழனிசாமி.
வாசகர் கருத்து (64)
Sugumar Mukambikeswaran - ,இந்தியா
07 மே,2026 - 01:15 Report Abuse
இதிலிருந்து என்ன தெரிகிறது? செங்கோட்டையன் திட்டமிட்டு பஜக வால் அனுப்பப்பட்ட துரந்தர். அவர் தமக்குக் கொடுக்கப்பட்ட வேலையை ஆரம்பித்து விட்டார். முதலில் அதிமுக ஒழித்துக் கட்டுவது. அடுத்து தவெக. 0
0
Reply
naadodi - Dallas,இந்தியா
06 மே,2026 - 21:01 Report Abuse
18 அ.தி.மு.க உறுப்பினர் த.வெ.க விற்கு மாறினால், அவர்கள் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம். கட்சி மாறல் தடை சட்டப்படி, 33% உறுப்பினர்கள் மாறினால் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டாம். பழனிசாமி மீண்டும் கூவத்தூர் போகப்போகிறாரா என்ன? 0
0
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
08 மே,2026 - 17:52Report Abuse
தவறான புரிதல் . .. அது 33% இல்லை , 66% ... அதனாலே 17 பேர் போனா அவர்கள் MLA பதவி காலி . .. 0
0
Reply
Krishna - bangalore,இந்தியா
06 மே,2026 - 19:17 Report Abuse
EPS ADMK is Vested-Selfish Without SteadyPolicies Bound to Split Several Times 0
0
Reply
Shanmugamgopal - ,இந்தியா
06 மே,2026 - 18:40 Report Abuse
எடப்பாடியார் அதிமுகவை அழிக்காமல் விடமாட்டார்.... 0
0
Reply
K Veerappan - Madurai,இந்தியா
06 மே,2026 - 17:38 Report Abuse
கட்சியை சல்லி சல்லியாக உடைத்து இறுதியில் முற்றிலும் அழிக்கத்தான் பழனிச்சாமி எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். சென்ற ஆட்சியில் எதிர் கட்சி தலைவர் மாதிரியாகவா நடந்து கொண்டார். தன் செல்வாக்கை மிகவும் தவறுதலாக நினைத்துக்கொண்டிருக்கும் மனிதர் . 0
0
Reply
Kumaresan - ,இந்தியா
06 மே,2026 - 17:11 Report Abuse
மாண்புமிகு எம் ஜி ராமசந்திரன் அவர்களால் கண்டெடுக்கபட்ட கட்சி, ஜெயலலிதாவால் காப்பற்றப்பட்ட கட்சி இன்று எடப்பாடி பழனிசாமி என்ற சனியனால் கட்சி காணாமல் போய்விட்டது. இனி கட்சிக்கு சிட்டிசன் கதைதான், எப்படியோ கட்சியின் சொத்தை அடையப்போட எடப்பாடி வழிவகுத்துக்கொண்டார். கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டுசென்றவன் தான் இந்த எடப்பாடி என்னும் துரோகி. 0
0
Reply
Raghu - ,இந்தியா
06 மே,2026 - 16:21 Report Abuse
எடப்பாடி ஏற்கனவே எட்டப்பன் முன்பு தினகரன் சொன்னது ஆகிவிட்டார் இப்போது எதையும் எட்டிப்பிடிக்க முடியாமல் வெறும் பாடியாக உள்ளார் எம்ஜிஆர் தொடங்கிய கட்சி கடைசியில் எட்டாப்பாடியில் முடிகிறது இனி திருடன்கள் முன்னேற்றக் கழகத்துக்கும் பெப்பே 2029 தேர்தலில் சுடலைதான் பிரதமராக போட்டி போட வேண்டும் ஏற்கனவே 40 பொம்மைகள் ஒரு ம.....யும் புடுங்கவில்லை இப்போது அவைகள் உண்மையான டம்மி பீஸ்கள் ஆகிவிட்டன எட்டாப்பாடி சங்கிகள் பக்கம் உள்ளதால், சுடலை சங்கிகள் கும்பலுடன்கை கோர்க்க முடியாத நிலைமை அப்படியே ஏதாவது அதிசயம் நிகழ்ந்து எம்ஜிஆர் தொடங்கிய கட்சி மோடியை கை கழுவிவிட்டு தவெகவிற்கு ஆதரவு அளித்தாலும், சுடலை சங்கிகளின் பக்கம் போனால் இத்தனை வருடங்களாக போட்ட சனாதன எதிர்ப்பு வேஷம் கலைந்துவிடும் அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது இனி திருட்டு முன்னேற்றக் கழகத்துக்கு தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் சவப்பெட்டி தயார் செய்து விட்டார்கள் மக்களுக்கு எலும்பு துண்டாக பணத்தை வீசி எறிந்தால் எதையும் விலைக்கு வாங்கி ஆட்சி நடத்தலாம் என்கிற கேடுகெட்ட ஈனத்தர முடிவுக்கு சவக்குழி தோண்டியாச்சு இனி சுடலை தனது கடைசி காலத்தை கொடைக்கானலுக்கு சென்று சைக்கிள் ஓட்டிக்கொண்டு ஓய்வெடுத்து கழிக்கலாம் மன்னராட்சி மர்கயா ஸ்டாலின் ஒழியட்டும் தமிழ்நாடு வளரட்டும் 0
0
Reply
rama adhavan - chennai,இந்தியா
06 மே,2026 - 15:25 Report Abuse
எம்ஜிஆர், அம்மா ஆக்கிய அதிமுகவை ஒழிக்க வந்த இவர் பாடி யோ? 0
0
Reply
Nesan - JB,இந்தியா
06 மே,2026 - 15:16 Report Abuse
அதிமுக தோல்விக்கு மற்றும் அண்ணாமலைக்கு செய்த துரோகத்திற்கு சுயநல எடப்பாடி தான் முழுக்க காரணம். செங்கோட்டையன், ஓபிஸ் என்னதான் துரோகியா இருந்தாலும், தேர்தல் சமயத்தில் வெளியில் அனுப்பியது, அண்ணாமலையை தலைமையை மாற்ற காரணம், சீமான் செயல் மாதரி சர்வ முட்டாள்தனமானது. இமிமேலாவது நெளிவு, சுளிவுடன், சுயலாம் இன்றி நாகரிகத்துடன் அரசியல் நடத்தினால் அதிமுக தப்பும் இல்லை என்றால் அந்த கட்சியே இல்லமால் போகும் வாய்ப்பு தினம். எடப்பாடி, நயினார், செல்வபெரும்தொகை, தினகரன், சீமான் உத்தம புத்திரர்கள் அல்ல. அதற்க்கு தவிக இவ்வோளோவோ மேல். 0
0
Reply
SRIDHAAR.R - Trichy,இந்தியா
06 மே,2026 - 14:45 Report Abuse
இப்படியே போனால் காம்பு தான் மிஞ்சும் 0
0
Reply
மேலும் 53 கருத்துக்கள்...
மேலும்
-
ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
-
அகற்றப்படாத அபாய மரங்கள் அசம்பாவிதம் ஏற்பட வாயப்பு
-
குடிக்க தண்ணீர் வந்து இரண்டு மாசமாச்சு! போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
-
மது பாட்டில்களில் மாலை அணிந்து வந்த சமூக ஆர்வலர்
-
நாகப்பாம்பை கையில் துாக்கி சென்று சாகசம் செய்தவர் கைது
-
துவங்கியது பருவமழை மேல்நீராறில் 93 மி.மீ., பதிவு
Advertisement
Advertisement