கட்சியை காப்பாற்றுவாரா இபிஎஸ்?: விஜய் ஆட்சிக்கு ஆதரவு அளித்தால் தப்பிப்பார்
நமது சிறப்பு நிருபர்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய்க்கு ஆதரவாக அடித்த அலையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுகவை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் அக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புத்திசாலித்தனமாக தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
ஓட்டு எண்ணிக்கை முடிவில் 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜய்க்கு இன்னும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க கவர்னரிடம் 14 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார் விஜய். அதற்குள் அவர் தனக்கு தேவையான ஆதரவு எம்எல்ஏக்களை தயார் செய்ய வேண்டும்.
அதற்கு கட்டாயம் சில கட்சிகளின் ஆதரவு அவருக்கு தேவை. திமுக கூட்டணியில் உள்ள காங்., (5) வி.சி., (2) கம்யூ.,கள், (4) மு.லீக்., (2) தேமுதிக (1) ஆகிய கட்சிகளை பிய்த்து எடுத்து தனக்கு ஆதரவளிக்குமாறு விஜய் கேட்கலாம். ஆனால் இத்தனை கட்சிகளை இழுத்து வருவது பிரம்ம பிரயத்தனம்.
அது மட்டுமல்ல, கூட்டணியில் இருக்கும்போதே விசிகவும், கம்யூனிஸ்டுகளும் திமுகவை பலமுறை ‛‛பிளாக்மெயில்'' செய்தன. இதனாலேயே வேண்டாத பெண்டாட்டியுடன் குடும்பம் நடத்தியது போல் அக்கூட்டணி இருந்தது. ‛‛குடும்பத் தலைவர்'' ஸ்டாலினும் இக்கட்சிகளை வெளியே விடாமலும் கேட்டதைக் கொடுக்காமலும் கூட்டணியை இழுத்து சென்றார். ஆக, இக்கட்சி தலைவர்களுடன் தொடர்ந்து ‛‛வாழ்க்கை'' நடத்துவது விஜய்க்கும் சிரமமாக இருக்கும். ஸ்டாலினையே போட்டுப்பார்த்த இக்கட்சி தலைவர்கள், விஜயை விட்டு வைப்பார்களா.
அதற்குப் பதில் 47 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுகவை மட்டும் ஆதரவு அளிக்குமாறு விஜய் கேட்கலாம். சபாநாயகர் பதவி அல்லது அமைச்சரவையில் பங்கு தருகிறேன் என்று விஜய் உறுதி அளிக்கலாம். சில அமைச்சர் பதவி கிடைப்பதால் இந்த ‛‛டீலுக்கு'' இபிஎஸ் ஒப்புக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டால் பழனிசாமி கையைவிட்டு அதிமுக சென்று விடும் என்று தேர்தலுக்கு முன்பே பரவலாக பேசப்பட்டது.
இதற்காகவே அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் காத்திருக்கின்றனர். அதிமுகவுக்கு உள்ளேயும் சிலர் ‛‛வெயிட்டிங்''. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்றால் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து கூட்டணி ஆட்சியில் பங்கெடுப்பது பழனிசாமிக்கு புத்திசாலித்தனமான வழியாக இருக்கும். தனது கட்சியில் உள்ள சீனியர்களுக்கு விஜய் அரசில் அமைச்சர் பதவியை பழனிசாமி வாங்கிக்கொடுத்தால் அவர்கள் வாயையும் அடைத்து விடலாம். அதிகாரத்தில் பங்கு கிடைப்பதால் அவர்கள் மீண்டும் பழனிசாமியின் கட்டுப்பாட்டிலேயே இருந்து கொள்வார்கள். கட்சியும் காப்பாற்றப்படும்.
மத்திய அரசுடன் இணைந்து விஜய் செயல்படும்போது, தமிழகத்திற்கு மத்திய அரசின் நிதி அதிக அளவில் கிடைக்கும். தேர்தல் வாக்குறுதிகளாக ஏற்கனவே விஜய் அறிவித்த திட்டங்கள்:
200 யூனிட் வரை இலவசம்..
வருடம் 6 சிலிண்டர் இலவசம்..
பெண்களுக்கு தமிழ்நாடு முழுக்க இலவச பயணம்..
திருமணத்தின் போது 8 கிராம் தங்கம், பட்டுபுடவை என மாமன் சீர்..
மூத்த குடிமக்களுக்கு மாதம் 3000
வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4000..
5 ஏக்கர் வரை முழு விவசாய கடன் தள்ளுபடி.. அதற்கு மேல் 50% தள்ளுபடி..
பெண்களுக்கு 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் போன்ற திட்டங்களை அறிவித்துள்ளார்.
இந்த திட்டங்களை நிறைவேற்ற கட்டாயம் மத்ததிய அரசின் நிதி உதவி தேவை. எனவே மத்திய அரசுடன் இணக்கமாக விஜய் செல்ல வேண்டியது அவசியம். நிதி இல்லாவிட்டால் இத்திட்டங்களை நிறைவேற்ற முடியாது.
இவற்றை நிறைவேற்றினால் தான் விஜய் அரசுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். தொடர்ந்து அடுத்த தேர்தல்களில் மக்களை சந்திக்க முடியும்.
விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் அதிமுக எம்எல்ஏக்கள் சிலரை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு விஜய் சொல்லலாம். அப்படி நடந்தால் அதிமுக உடைவதை தவிர்க்க முடியாது. என்ன செய்யப் போகிறார் எடப்பாடி என்பதை பொறுத்து தான் அதிமுகவின் எதிர்காலமே இருக்கிறது.
கருத்து தேவையில்லாத ஒன்று உங்கள யாரும் கேக்கல இதிலெல்லாம் ஏதோ உள் குத்து வேலையா.....
எடப்பாடி ஜெயிக்கவில்லை என்பதற்காக லாட்டரி ரொம்ப யோக்கியன் என்று அர்த்தம் கிடையாது .....ஒரு சீட்டு ஜெயித்தவனும் மக்கள் ஆதரவுடன் தான் ஜெயித்துள்ளான் ....
ஆட்சி நடத்த வேண்டும் என்றால் லாட்டரி நேரடியாக ஆதரவு கேட்க வேண்டியதுதானே?? ...அடுத்தவன் கட்சியை செங்ஸ் மூலம் உடைப்பேன் என்றால் அடுத்தவன் பார்த்து கொண்டு சும்மா இருக்கணுமா?? ....
லாட்டரி பணத்தில் கட்சி நடத்தறவன் ரொம்ப யோக்கியனா ....
பழனிச்சாமியை பழைய தலைவர்களுடன் ஒப்பிட முடியாது.
ஆனாலும் பழனிசாமிக்கு பின் வேறு யாரும் தலைமையை ஏற்று நடத்த முடியுமா என்று தெரியவில்லை.
அவர் தன் சுய நலத்தை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
நன்று அனுசரித்து போவது அவசியம்.
தேர்தல் முடிவு வந்துடவன் விடியல் நாங்கள் எதிர் கட்சி என்று அறிவித்து ராஜினாமாவும் கொடுத்து விட்டார் ....மேற்கு வாங்க திதியை போல எந்த நாடகமும் விடியல் நடத்தவில்லை ....
எடப்பாடியும் லாட்டரி ஆட்சி அமைப்பதை எதிர்க்கவில்லை ..
இப்பொது எந்த கட்சியும் அடுத்த தேர்தலுக்கு தயார் கிடையாது ..ஆனால் லாட்டரி அதற்கும் மேல் வரம்பு மீறி விடியல் கூட்டணியை உடைப்பதும்...
அ தி மு க கட்சியை உடைப்பதும் என்று முயற்சியில் ஈடுபட்டால் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியதுதான் ....
லாட்டரி பணத்தில் கட்சி நடத்தறவன் ரொம்ப யோக்கியனா ....
அதிமுக என்ற கட்சி இருக்க பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கணும். பழனிச்சாமி உண்மையாகவே அதிமுக கட்சிமேல் பற்று இருந்தால் இந்த தேர்தலின் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியை திறமை உள்ளவருக்கு பொது செயலாளர் பதவியை கொடுக்கணும். இப்படி செய்தால் பழனிச்சாமி மேல் கொஞ்சமாவது மக்களுக்கு மதிப்பு இருக்கும். பணத்தால் அரசியல் செய்யலாம் என்ற சித்தாந்தம் இப்போ தொற்று விட்டது. இவருக்கு இருக்கும் ஒரே திறமை பணம். இப்போ இது செல்லாது. அதிமுகவில் எம்ஜியார் என்ற கொடைவள்ளல் கொடுத்து கொடுத்து கைசிவந்தவர். ஆனால் எம்ஜியாருக்கு பின் எல்லா அதிமுக தலைவர்களும் கொள்ளை அடித்தார்கள் விளைவு கட்சி உருக்குலைந்து விட்டது. முதலில் பழனிசாமிக்கு தமிழ்நாட்டை பற்றி ஏதாவது தெரியுமா. .இப்படி பட்டவர் எப்படி ஒரு கட்சியை வழிநடத்த முடியும்..
லாட்டரி பதவி ஏற்பதை எடப்பாடி எப்போது எதிர்த்தார் ??.....எடப்பாடி ஆதரவு கேட்டு லாட்டரி கடிதம் எழுதி அதற்கு எடப்பாடி மறுத்து விட்டாரா??......
இப்பொது சட்ட சபையில் பெரிய கட்சி லாட்டரி ...கவர்னரிடம் நேரம் கேட்டு லாட்டரி முதல்வர் ஆக வேண்டியதுதானே ??....
யார் தடுத்தார்கள் ....இப்பொது எந்த கட்சியும் அடுத்த தேர்தலுக்கு தயார் கிடையாது ...
தன்னை தானே எம் ஜி ஆர் போன்று எண்ணிக்கொண்டாவரிடம் அரசியல் ஆற்றலை எதிர்ப்பார்க்க முடியாது. ஒண்ணுமே இல்லாத காங்கிரசை விஜய் கூட்டணியில் சேர்க்க வைத்தது இந்த பழனிச்சாமியால்தான். கூட்டணி போர்வையில் இனி காங்கிரஸ் தனக்கு செல்வாக்கு இருப்பதாக வெற்றிபெற்று காட்டிக்கொள்ளும். அப்படிப்பட்ட சூழலில் அதிமுக என்ன செய்திருக்க வேண்டும்? விஜய்க்கு தனது ஆதரவை கொடுத்திருக்க வேண்டும். பங்காளிகளின் யோசனையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக கனா கண்டுகொண்டுள்ளார் இங்கே நடக்கும் அரசியல் தெரியாமல். அதிமுக தலைமையில் மாற்றம் இல்லை என்றால் அக்கட்சியை காப்பாற்ற ஆண்டவனால் கூட முடியாது என்பதை இந்த இரண்டாம் கட்ட தலைகள் பயந்துபோய் ஒழிந்துகொள்ளாமல் துணிந்து முடிவெடுக்க வேண்டும். திமுக நரித்தனத்தில் அதிமுக விழுந்துவிட கூடாது. திமுகவின் தூதுவனாக பரட்டையின் விஜய் எரிச்சலில் பலிகடா ஆகிவிட கூடாது.
எப்படி இருந்து புரட்சி தலைவர் அம்மா என்று பேசிய வாய் துர்நாற்றம் வீசுகிறது அண்ணாமலை அண்ணாமலை மாறிய நீ அடுத்த கட்சி பற்றியோ அதன் நிர்வாகிகள் பற்றியோ பேசக்கூடாது..
இத்தனை ஆண்டுகள் பல கடந்தும் அதிமுக என்கிற மாபெரும் இயக்கத்தை எவ்வளவு இன்னல் வந்தபோதும் காப்பாற்றினார்...
1977ல் ஜூன் 14 வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற MGR, ஜூன் 30தான் பதவி ஏற்றார். அதுபோல், சிறிது தாமதமானாலும் விஜய் தான் CM.
தேர்தல் முடிவு வந்துடவன் விடியல் நாங்கள் எதிர் கட்சி என்று அறிவித்து ராஜினாமாவும் கொடுத்து விட்டார் ....மேற்கு வாங்க திதியை போல எந்த நாடகமும் விடியல் நடத்தவில்லை ....எடப்பாடியும் லாட்டரி ஆட்சி அமைப்பதை எதிர்க்கவில்லை ....ஆனால் லாட்டரி அதற்கும் மேல் வரம்பு மீறி விடியல் கூட்டணியை உடைப்பதும் , அ தி மு க கட்சியை உடைப்பதும் என்று முயற்சியில் ஈடுபட்டால் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியதுதான் ....
லாட்டரிக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் எடப்பாடி பரிகாரம் தேட வாய்ப்புண்டாம் ... ..
CHALLENGES AHEAD FOR THE GOVERNMENT FORMATION ON JOSEPH VIJAY AFTER 2026 ASSEMBLY ELECTION FOR TAMIL NADU
CASTE-BASED RESERVATION IS A LIMB SACRIFICE INSTEAD OF HEAD.
ஜாதி ரீதியான இட ஒதுக்கீட்டிற்கும், ஜோசப் விஜய்க்கும் என்ன ஒற்றுமை?
General Caste-ஐச் சார்ந்த மாணவன் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்தாலும், அந்த மாணவனுக்கு எந்த கல்லூரியிலும் சீட் கிடைக்காமல், எந்த வேலையும் கிடைக்காமல் இருப்பதை நம் பாரத நாடு முழுவதும் நாம் காண்கிறோம்.
58 வருடங்களாக தமிழகத்தை ஆட்டிப்படைக்கின்ற வகையில் ஆட்சி செய்யும் இரு பெரும் திராவிட கட்சிகள் வெறும் இரண்டு இலக்க சீட்கள் எண்ணிக்கை மட்டுமே பெற்று தோல்வி அடைந்த போதும், கட்சி ஆரம்பித்து இரண்டே வருடங்கள் ஆன தவெகவின் ஜோசப் விஜய் மூன்று இலக்கங்களைக் கொண்ட 108 சீட்களை வென்று முதல் இடத்தில் இருக்கும் போதும், ஜோசப் விஜய் ஒரு பெரிய திருவோட்டை எடுத்துக் கொண்டு, "அம்மா தாயே பத்து சீட்கள் பிச்சை போடுங்கம்மா" என்று தன்னிடமே போட்டியிட்டு தோற்றவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சும் அவலத்தில் இருக்கும் ஜோசப் விஜய்யைப் பார்க்கும் போது, 1950 முதல் இன்றுவரை 76 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் ஜாதி ரீதியான இட ஒதுக்கீட்டின் காரணமாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கல்லூரியில் இடம் கிடைக்காமலும், வேலையும் கிடைக்காமலும், இருக்கும் General Caste மாணவர்களை ஞாபகப்படுத்துகிறது.
WE CONDEMN THAT CASTE-BASED DISCRIMINATION IS APPLIED FOR DIVIDING OUR HINDU CITIZENS.
இந்த இழிநிலை நம் நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய சாபக்கேடு.