முதல்வரின் தோல்வி வருத்தம் தரக்கூடியது; காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்
நமது நிருபர்
முதல்வரின் தோல்வி வருத்தம் தரக்கூடியது. ஸ்டாலின் நீண்ட கால அரசியல்வாதி, அவருடைய தோல்வி வருத்தமானது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
இது குறித்து நிருபர்களிடம் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியதாவது: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பாஜவுக்கு எதிராக நின்று வெற்றி பெற்று இருக்கிறார். திருப்பரங்குன்றத்தில் தவெக வேட்பாளர் தான் வெற்றி இருக்கிறார். தமிழகத்தில் மதவாத சக்திகள் நுழைய முடியாது. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை தலைமை முடிவு எடுத்து இருக்கிறது.
காங்கிரஸ் அரசியல் விவகார குழு நேற்று இரவு எடுத்த முடிவை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று அறிவிப்பார், எங்களை பொறுத்தவரை தமிழகத்திற்குள் பாஜ வரக்கூடாது. ஆர்எஸ்எஸ் வரக்கூடாது. திமுக உடனான கூட்டணி தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. தமிழக வாக்காளர்கள் தெளிவாக முடிவு எடுத்து இருக்கின்றனர். சிலர் சொல்லி கொண்டு இருந்தனர்.
தமிழக மண்ணுக்கு ஆட்சியில் பங்கு ஒத்து வராது என்றனர். தமிழக மக்கள் பதில் சொல்லி விட்டனர். தீர்மானித்து விட்டனர். முதல்வரின் தோல்வி வருத்தம் தரக்கூடியது. ஸ்டாலின் நீண்ட கால அரசியல்வாதி, அவருடைய தோல்வி வருத்தமானது. தமிழக காங். தலைவரின் தோல்வியும் நடந்து இருக்க கூடாது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எங்களுடைய தலைவர் ராஜிவ் காந்தி மறைந்த இடம். அந்த இடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தோல்வி வருத்தம் தருகிறது. இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.
@block_Y@
காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவளிக்கவுள்ள நிலையில், ''தோற்றாலும் தோல்வியில்லை நம்மிடம்..'' என பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.block_Y
@block_G@
மற்றொரு பதிவில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாவது: தீர்ப்பு திமுக அரசுக்கு எதிராக வந்துள்ளது. அமைச்சர்களில் பாதிப்பேர் தோல்வி அடைந்துள்ளனர். நாங்கள் எந்த தவறும் செய்யாமலே படுதோல்வி அடைந்துள்ளோம்.
இப்போது பாஜ தமிழகத்தை குறி வைத்துள்ளது. நம் முன் இருக்கும் கேள்வி மிகத்தெளிவானது. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் நாம் இருக்க வேண்டுமா அல்லது பாஜவை எதிர்த்து போராடிய சக்தியுடன் இணைந்து நிற்க வேண்டுமா என்பதே அந்த கேள்வி. இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
block_G
வாழைப்பழத்தில் ஊசிதான் ஏற்றுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இவர் கடப்பாரையையே ஏற்றிவிட்டார். பாவம் அப்பா ரொம்ப வருத்தப்படுவார்.
தேசவிரோதமாகவே எப்பொழுதும் செயல்பட்ட ஸ்டாலினின் தோல்வி கொண்டாடப்பட வேண்டியதே.
இவரு என்னமோ காங்கிரஸ் யோக்யம் மாதிரி பேசுகாரு. திமுகவுடன் சேர்ந்து பெரும் பெரும் ஊழல்கள் செய்து கொள்ளையடிக்கும்போது தெரியலையோ?
முதலில் இந்த தடியனை ஒளிச்சு கட்டணும். அடுத்த MP எலெக்ஷன் muminai போட்டி பாக்கலாம் எப்படி இந்த தடியன் எல்லாம் தப்பிக்கிறான் என்று. காங்கிரஸ் இப்படிதான் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத ஆட்களை வச்சு மக்களை ஏமாற்றி வருகிறது.
மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களே.
எல்லாத்தையும் செஞ்சுட்டு இப்ப வருத்தம் சொல்கிறார்?
ஆமா ஆமா வருத்தம் தரக்கூடியது. உண்மைதான். ஆட்சியில் பங்கு டமில் நாட்டில் இல்லவே இல்லைன்னு சொன்ன கல் நெஞ்சன் வீழ்ந்து கிடக்கிறார். தூக்க ஆள் இல்லை. ரௌடி சேகர் பாபு மாதிரி நம்மால் அழவுற வேலையெல்லாம் பண்ண முடியாது. இருந்தாலும் சொல்லி வைப்போம்.
இந்த ஆளுக்கு வாய் கொழுப்பு அதிகம் .
அரசன் அன்று கொல்வான்... தெய்வம் நின்று கொல்லும்... இப்பொழுது தான் சாட்டையை உருவி உள்ளது...
நன்றே நடக்கும் நம்பிக்கையுடன் இருப்போம்...
காங்கிரஸ் திருடர்களானது இதுதான் முதல் முறை. பாஜ, ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் நுழையக்கூடாது என்பது திமுகவின் சித்தாந்தம். அது நிறைவேறியது . பாஜ, ஆர்எஸ்எஸ் இந்தியாவில் வளரக்கூடாது என்பதுதான் காங்கிரசின் சித்தாந்தம். அது நிறைவேறவில்லை. த வெ கவுடன் சேர்வதால் தமிழகத்தில் பதவிக்கு வந்துவிடலாம் என்று கனவு காணலாமே தவிர, பாஜ இந்தியாவில் வளரக்கூடாது என்ற காங்கிரசின் சித்தாந்தம் நிறைவேறிவிடும் என்று கனவு கூட காண முடியாது .
tamilan.. அப்போ எப்படி கொளத்தூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர் எல்லா இடங்களும் திமுக தோற்றது..பதில் சொல்ல வக்கு இருக்கா