மலைகளில் மழை; கிராமத்தினர் நிம்மதி
வடமதுரை, மே 6-
அய்யலுார், புத்துார் மலைப்பகுதிகளில் மே 2ல் மழை பெய்ததையடுத்து தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் காட்டு மாடுகள் வருவது நின்றுள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
புத்துார் ஊராட்சியையொட்டி முடிமலை, பண்ணமலை வனப்பகுதிகளில் ஏராளமான காட்டுமாடுகள் வாழ்கின்றன. சில மாதங்களாக வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் நீருற்றுகள் வறண்டதால் காட்டுமாடுகள் நீர் தேடி மலைப்பகுதியையொட்டி விவசாய தோட்டங்கள், குடியிருப்பு பகுதிக்கு இறங்கி வந்தன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சத்துடன் இருந்தனர். சிலரது விவசாய நிலங்களிலும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மே 2ல் இப்பகுதி மலைகளில் கன மழை பெய்ததால் ஆங்காங்கே இருக்கும் பாறை குழிகளில் நீர் தேங்கி உள்ளன. இதனால் நீரை தேடி தரைப்பகுதிக்கு காட்டு மாடுகள் இறங்கி வருவது நின்றுள்ளதால் விவசாயிகள், மக்கள் நிம்மதியில் உள்ளனர்.
மேலும்
-
இபிஎஸ் உடன் தவெக ஆனந்த் சந்திப்பு
-
தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரம்
-
இன்று மதியம் 2 மணிக்கு முடிவை அறிவிக்கிறார் சோடங்கர்
-
உடைகிறதா அதிமுக?: எம்எல்ஏ கூட்டத்தை தள்ளிவைத்தார் இபிஎஸ்
-
கட்சியை காப்பாற்றுவாரா இபிஎஸ்?: விஜய் ஆட்சிக்கு ஆதரவு அளித்தால் தப்பிப்பார்
-
முதல்வரின் தோல்வி வருத்தம் தரக்கூடியது; காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்