போதைப்பொருள் கடத்தல்: காஷ்மீரில் 500 பேர் கைது
ஜம்மு: ஜம்மு -- காஷ்மீரை போதைப்பொருள் இல்லாத யூனியன் பிரதேசமாக்க துவங்கப்பட்ட நடவடிக்கையில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சொந்தமான 14.50 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு -- காஷ்மீரில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கத்தை போக்க துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, 'போதைப்பொருள் இல்லா காஷ்மீர்' என்ற இயக்கத்தை துவக்கினார்.
காவல் துறையினர், அரசு அதிகாரிகள், பொது மக்களின் பங்கேற்புடன் ஏப்ரல் 11-ம் தேதி ஜம்முவில் இந்த இயக்கம் துவங்கப்பட்டது. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் யூனியன் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பல போதைப்பொருள் கும்பல்கள் சிக்கின. அவர்களிடம் இருந்து 4.70 கிலோ ஹெராயின், 27.13 கிலோ சரஸ் மற்றும் 209 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
ஒரு மாதத்திற்குள் 537 பேர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான 14.50 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தோடாவில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, போதைப்பொருள் கடத்தல் என்பது பயங்கரவாதத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல; இதில் ஈடுபடுவோர் சட்டத்தின்படி பயங்கரவாதிகள் போலவே கையாளப்படுவர். இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல, ஒரு சத்தமில்லா பயங்கரவாதம்,'' என்றார்.
மேலும்
-
இபிஎஸ் உடன் தவெக ஆனந்த் சந்திப்பு
-
தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரம்
-
இன்று மதியம் 2 மணிக்கு முடிவை அறிவிக்கிறார் சோடங்கர்
-
உடைகிறதா அதிமுக?: எம்எல்ஏ கூட்டத்தை தள்ளிவைத்தார் இபிஎஸ்
-
கட்சியை காப்பாற்றுவாரா இபிஎஸ்?: விஜய் ஆட்சிக்கு ஆதரவு அளித்தால் தப்பிப்பார்
-
முதல்வரின் தோல்வி வருத்தம் தரக்கூடியது; காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்