வணிகர் தினத்தையொட்டி 5,-000 கடைகள் அடைப்பு
நாமக்கல்:மே
5ல், வணிகர் தினமாக, தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு, வணிகர் தினத்தை முன்னிட்டு, விக்கிரமராஜா தலைமையிலான
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, திருவாரூரில், '43வது
வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு'நடத்தியது.
'வணிகர்
தினத்தை முன்னிட்டு, மே, 5ல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து
கடைகளுக்கும் விடுமுறை அளித்து, வியாபாரிகள் குடும்பத்துடன்
திருவாரூர் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்' என, பேரமைப்பின் நாமக்கல்
மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.இதையொட்டி, நாமக்கல் நகரில் உள்ள ஜவுளிக்கடைகள், நகைக்
கடைகள்,
பாத்திரக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகைக்கடைகள்,
ஹார்டுவேர்ஸ், பெயின்ட், எலக்ட்ரிகல் கடைகள், மொபைல் போன்,
எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும்
முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இதனால், தங்களுக்கு தேவையான
பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
மருந்துக்கடைகள், ஓட்டல்கள், பால் பூத்துகள் மட்டும் செயல்பட்டன.
அதேபோல், மோகனுார், சேந்தமங்கலம், ராசிபுரம், ப.வேலுார்,
திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், வணிகர்
தினத்தை முன்னிட்டு, 5,000 கடைகள் மூடப்பட்டிருந்தன.
மேலும்
-
இபிஎஸ் உடன் தவெக ஆனந்த் சந்திப்பு
-
தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரம்
-
இன்று மதியம் 2 மணிக்கு முடிவை அறிவிக்கிறார் சோடங்கர்
-
உடைகிறதா அதிமுக?: எம்எல்ஏ கூட்டத்தை தள்ளிவைத்தார் இபிஎஸ்
-
கட்சியை காப்பாற்றுவாரா இபிஎஸ்?: விஜய் ஆட்சிக்கு ஆதரவு அளித்தால் தப்பிப்பார்
-
முதல்வரின் தோல்வி வருத்தம் தரக்கூடியது; காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்