தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர்
கரூர்:கரூர்
தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற, முன்னாள் அமைச்சர் விஜய
பாஸ்கர், நேற்று முன்தினம் நள்ளிரவு தலைவர்களின் சிலைக்கு மாலை
அணிவித்தார்.
கரூர் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள்
அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டார். நேற்று முன்தினம் நடந்த ஓட்டு
எண்ணிக்கையில், ஆரம்பம் முதல் முன்னிலையில் இருந்த விஜயபாஸ்கர், 21
சுற்று முடிவில், 1,821 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கரூர் தொகுதியில், 79 பேர் போட்டியிட்டதால் ஓட்டு எண்ணிக்கை, நேற்று
முன்தினம் நள்ளிரவில் முடிந்தது. இதையடுத்து, கரூர் லைட் ஹவுஸ்
கார்னரில் உள்ள, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்.,
ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, அ.தி.மு.க., - பா.ஜ.,
மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும்
-
இபிஎஸ் உடன் தவெக ஆனந்த் சந்திப்பு
-
தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரம்
-
இன்று மதியம் 2 மணிக்கு முடிவை அறிவிக்கிறார் சோடங்கர்
-
உடைகிறதா அதிமுக?: எம்எல்ஏ கூட்டத்தை தள்ளிவைத்தார் இபிஎஸ்
-
கட்சியை காப்பாற்றுவாரா இபிஎஸ்?: விஜய் ஆட்சிக்கு ஆதரவு அளித்தால் தப்பிப்பார்
-
முதல்வரின் தோல்வி வருத்தம் தரக்கூடியது; காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்