மழைநீர் தேங்கிய கடலாடி பத்திரப் பதிவு அலுவலகம்

கடலாடி: கடலாடி பத்திரப்பதிவு அலுவலகம் ஒவ்வொரு மழைக் காலங்களிலும் தண்ணீர் தேங்கிய நிலையிலேயே இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேவர் பிளாக் கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு ஓரிடத்தில் அடுக்கப்பட்ட நிலையில் தற்போது வரை தொடர்கிறது.

எனவே பருவமழை மற்றும் கோடை மழை காலங்களில் தண்ணீர் பெருவாரியான வளாகத்தில் தேங்கியுள்ளது. அவற்றை அப்புறப்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கையும் பத்திரப்பதிவு நிர்வாகம் எடுப்பதில்லை. விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகளவு உள்ளது.

இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement