உ.பி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் உயிரிழப்பு

2

லக்னோ: உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ், 38, உயிரிழந்தார்.

உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ். இவரது இளைய மகன் பிரதீக் யாதவ், 38,. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவசரமாக லக்னோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன் பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இவர் பாஜ தலைவர் அபர்ணா யாதவின் கணவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சகோதரரும் ஆவார்.

பிரதீக் யாதவ் நீண்ட காலமாக நுரையீரல் தொடர்பான பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement