செவிலியர் தினம் 

சிவகங்கை,மே 13-

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் அரிமா சங்க நிர்வாகிகளுடன் இணைந்து கொண்டாடப்பட்டது.

செவிலியர் கண்காணிப்பாளர் குர்ஷித் பிச்சம்மாள் தலைமை வகித்தார். செவிலியர் சங்க செயலாளர் தேவசேனா, செவிலியர்கள் ராணி, மாலதி முன்னிலை வகித்தனர். செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அரிமா சங்க தலைவர் ரமேஷ்கண்ணன், செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் செந்தில்குமார், கேப்டன் சரவணன் செவிலியர்களை பாராட்டி சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். 

Advertisement