தண்டவாளத்தை கடந்தவர் ரயில் மோதி உயிரிழப்பு
மறைமலை நகர், மே 18-–
மறைமலை நகர் அடுத்த தைலாவரத்தில், ரயில் மோதி வாலிபர் உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு – தாம்பரம் ரயில்வே தடத்தில், பொத்தேரி ரயில் நிலையம் அடுத்த தைலாவரம் ரயில்வே கேட் அருகில், மின்சார ரயிலில் அடிபட்டு, இறந்த நிலையில் ஆண் உடல் கிடப்பதாக, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார், உடலை மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், இறந்த நபர், குன்றத்துார் பகுதியை சேர்ந்த முத்தரசன், 35, என்பதும், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. முத்தரசன், தண்வளாத்தை கடக்கும் போது ரயில் மோதி உயிரிழந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.
மேலும்
-
புனே மாணவர்களுக்கு சுடுமண் சிற்ப பயிற்சி
-
புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியது பொதுமக்களே முன் வந்து தகவல்களை பதிவு செய்யலாம்
-
சொல்கிறார்கள்
-
'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு மத்திய அரசுக்கு களங்கமே!
-
புதிய கங்கை நதி நீர் பகிர்வு ஒப்பந்தமே இந்தியாவுடனான உறவை தீர்மானிக்கும்: வங்கதேச அமைச்சர் மிரட்டல்
-
பயணியரின் நீர்ச்சத்துக்காக உப்பு - சர்க்கரை கரைசல் வழங்கிய மாநகராட்சி