புதிய கங்கை நதி நீர் பகிர்வு ஒப்பந்தமே இந்தியாவுடனான உறவை தீர்மானிக்கும்: வங்கதேச அமைச்சர் மிரட்டல்
டாக்கா: புதிய கங்கை நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை சார்ந்தே இந்தியாவுடனான உறவு இருக்கும் என, வங்கதேசம் கூறியுள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்துடனான கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தம், 1996ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் தேவகவுடா மற்றும் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா முன்னிலையில் கையெழுத்தானது. இந்தாண்டுடன் முடிய உள்ளது இந்த, 30 ஆண்டு கால ஒப்பந்தம்.
இதையடுத்து, நீண்ட கால அடிப்படையிலான ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வங்கதேசம் வலியுறுத்தி வருகிறது-.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வங்கதேச அரசியலில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களைத் தொடர்ந்து, இந்தியாவுடனான உறவில் அந்நாடு புதிய நிலைப்பாட்டை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து அங்கு ஆளும் பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சியின் பொதுச் செயலரும், அந்நாட்டின் உள்ளாட்சி துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான மிர்சா பக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் கூறியுள்ளதாவது:
வங்கதேச மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப, விவாதங்கள் வாயிலாக புதிய கங்கை ஒப்பந்தம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற தெளிவான செய்தியை நாங்கள் இந்திய அரசுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம்.
மேலும், இந்தியாவுடன் நல்லுறவு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இந்த புதிய ஒப்பந்தத்தை சார்ந்தே இருக்கும். 30 ஆண்டுகால நதி நீர் ஒப்பந்த புதுப்பித்தலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, எதிர்கால நதிநீர் பகிர்வு குறித்த கவலைகளை ஏற்படுத்தி உள்ளது.
புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை தற்போதைய ஒப்பந்தமே அமலில் இருக்க வேண்டும்.
அண்டை நாடுகளுக்கு இடையே எதிர்காலத்தில் ஏற்படும் நதிநீர் பகிர்வு ஒப்பந்தங்கள் ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் மட்டும் மட்டுப்படுத்தக்கூடாது.
வங்கதேசத்தின் 17 கோடி மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் தங்களின் வாழ்வாதாரம், பல்லுயிர் பெருக்கம் மற்றும் பல கிளை நதிகளுக்கான நீர் வினியோகத்துக்கு இந்த நீரையை நம்பியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மர்ம நபர்களை வங்காள தேச க்கு அனுப்பி நுங்கு எடுக்கும் நேரம் வந்தாச்சு
உங்கள் மிரட்டல் உங்களுக்குத்தான் ஆப்பு அமெரிக்காவையே ஓரம் கட்டியவர் எங்கள் மோடி நீ எல்லாம் ஆவார் கால் தூசுக்கு சமம்.
உன்னோட சங்காத்தமே வேண்டாம். ஒருவேளை ஹசீனா மீண்டும் ஆட்சியமைத்தால் அதைப்பற்றி பரிசீலனை செய்யலாம்.
மிரட்டி எல்லாம் எங்க பிரதமர் மோடி அவர்கலிய்ய அடி பனி வைக்க முடியாது.ராகுல் இருக்கிறார் உங்களுக்கு ஏற்ற ஆள் அவருடன் ஒப்பந்தம் போராடவேனா தேவையில்லையய உங்க்ளுக்காக இரவும் பகுலும் ஓயாமல் வேலை செய்ய்வார். திருமாஸ் வேலையில் கில்லாடி.
பல் உயிர் பெருக்கம் இது தான் உங்க்க குறிக்கோள். பெத்து ஜனதொகையைய்ய பேருக்கு அண்ண்டைய நாட்டிற்கு பிரச்சன்னைய்யகளை உண்டாக்குவது . அதற்க்கு இந்தியா ஏன் உதவ வேண்டும்? ஏங்க்கா கைய்ய விரலை வைத்து எங்க கன்னையென குத்த பார்க்கும் அண்டை நாடுகள். நெக்ஹ்க்க நேரத்திற்கு யேர்ப்ப மிரட்ட பாகிஸ்தானை நாடுவீர்கள். நாங்க யேமாந்த சோனா கிரியங்களா?
அப்ப அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க நீ பக்கிகளுக்கு ஸலாம் போட்டுட்டு , ஹிந்துக்களை அழிச்சிகிட்டு தண்ணின்னு இங்க மோடிகிட்ட வந்தீன்னா உனக்கு தண்ணிய காட்டிடுவார்
இந்தியா வங்கதேசத்தை சரியாக டீல் செய்யும் ......
கல்கத்தா துறைமுகம் கடலில் அமையவில்லை. கங்கை நீரையே சார்ந்துள்ளது. அதே கங்கை நீரில் விவசாயம் செய்ய வங்கதேசமும் பங்கு கேட்கிறார்கள். முந்தைய ஒப்பந்தம் அவர்களுக்கே சாதகமாக உள்ளது. ஹிந்துக்களை சமமாக நடத்தும்வரை புதிய ஒப்பந்தம் வேண்டாம். ஆண்டு முழுவதும் நோன்பு இருக்கட்டும். மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வார்.
இந்த அதிகார பிச்சைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை ..இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக எங்களுக்கும் சில உத்திரவாதம் வேணும்ல்ல ...அதனால ரொம்ப ஆடாதீங்க ....
அய்யா, அம்மா ராப்பிச்சை வந்திருக்கேன். மரியாதையா பிரியாணி போடுங்க, இல்லையினா உங்க வீட்டு வாசல்ல பிச்சை கேட்க வரமாட்டேன் ஜாக்கிரதை.மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
சவுமியா சுவாமிநாதனுக்கு லண்டன் ராயல் சொசைட்டியின் கவுரவம்
-
'சாட்ஜிபிடி'(ChatGPT)-யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி!
-
பல்லவ மன்னர்களின் செப்பேடுகள்: ஸ்காட்லாந்தில் இருந்து மீட்க முயற்சி