பயணியரின் நீர்ச்சத்துக்காக உப்பு - சர்க்கரை கரைசல் வழங்கிய மாநகராட்சி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், மாநகராட்சி சார்பில் பயணியரின் நீர்ச்சத்துக்காக ஓ.ஆர்.எஸ்., எனும் உப்பு - சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்ப அலையால் பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க பொது சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு, நீர்ச்சத்து மற்றும் தாது உப்புகளின் இழப்பை ஈடு செய்யும் வகையில், இலவசமாக ஓ.ஆர்.எஸ்., எனும் உப்பு - சர்க்கரை கரைசல் வழங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதே போல, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், மாநகராட்சி சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பயணியருக்கு தினந்தோறும் இலவச ஓ.ஆர்.எஸ்., எனும் உப்பு - சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது.
இதற்கென மாநகராட்சி ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டு 15 நாட்களுக்கும் மேலாக ஓ.ஆர்.எஸ்., எனும் உப்பு - சர்க்கரை கரைசல் வழங்கி வருகிறார்.
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து