மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் டிரைவர், கிளீனர் தப்பியோட்டம்
கொளத்துார், மே 23-–
உரிய ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றி வந்த லாரியை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் மற்றும் கிளீனர் தப்பிச் சென்றனர்.
புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளரான சுபத்ராதேவி, கொளத்துார் செந்தில் நகர் பகுதியில், நேற்று முன்தினம் தணிக்கை ஆய்வில் இருந்தார். அப்போது, டிஎன்:09 க்யூ 0662 என்ற எண் கொண்ட டிப்பர் லாரி, மூன்று யூனிட் மணல் ஏற்றி வந்தது.
லாரியை பிடித்து தணிக்கை செய்தபோது, கொண்டுவரப்பட்ட மணலுக்கான உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை ராஜமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் தப்பிச் சென்றனர். இதுகுறித்து, ராஜமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பத்திரப்பதிவுக்கு அதிக மதிப்புக்கு முத்திரைத்தாள் வாங்குவது அவசியமா?
-
கட்டுமான பகுதியில் கம்பி வளைப்புக்கு விடைகொடுங்கள்!
-
கட்டுமான பணியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள்!
-
கட்டடத்தின் மேல்தளத்தில் புதிய வகை 'ஸ்லாப்' அமைக்கலாம்!
-
புதிய வீடு கட்ட எந்த வகை ஒப்பந்தத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
-
வீடு கட்டுவதா வாங்குவதாl: குழப்பத்துக்கு தீர்வு என்ன?
Advertisement
Advertisement