தினமலர் செய்தி எதிரொலியாக பயன்பாட்டிற்கு வந்த கழிப்பறை
காஞ்சிபுரம், மே 23–
காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் ஊராட்சி அம்பேத்கர் நகரில், பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்த பொது கழிப்பறை கட்டடத்தை சீரமைத்து தர வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இது குறித்த செய்தி, நமது நாளிதழில், நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, தாமல் ஊராட்சி நிர்வாகம் சார்பில், கழிப்பறையை சுற்றியிருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
சுகாதார சீர்கேடாக இருந்த ஆண்கள் கழிப்பறை, துாய்மை செய்யப்பட்டது. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை திறக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பத்திரப்பதிவுக்கு அதிக மதிப்புக்கு முத்திரைத்தாள் வாங்குவது அவசியமா?
-
கட்டுமான பகுதியில் கம்பி வளைப்புக்கு விடைகொடுங்கள்!
-
கட்டுமான பணியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள்!
-
கட்டடத்தின் மேல்தளத்தில் புதிய வகை 'ஸ்லாப்' அமைக்கலாம்!
-
புதிய வீடு கட்ட எந்த வகை ஒப்பந்தத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
-
வீடு கட்டுவதா வாங்குவதாl: குழப்பத்துக்கு தீர்வு என்ன?
Advertisement
Advertisement