சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருவள்ளூர்: சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 14 வட்டாரங்களில் சோழவரம் மற்றும் கடம்பத்துார் நீங்கலாக, காலியாக உள்ள 12 வட்டாரங்களிலிருந்து, ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. கல்வித் தகுதி பிளஸ் 2 தேர்த்தி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 35. சுயஉதவிக் குழு ஊக்குநராக குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சேர்ந்த பெண் சுய உதவிக் குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ளோர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்திற்கு, வரும் 29க்கும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement