எம்.எல்.ஏ., வெற்றி சான்றுடன் பறந்தவர் பதவியை துறந்து த.வெ.க.,வில் ஐக்கியம்

பெருந்துறை:சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட ஜெயக்குமார் வெற்றி பெற்றார். த.வெ.க., அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில், அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தது.


இதில் வேலுமணி அணிக்கு ஜெயக்குமார் தாவினார். இதனால் தொகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேசமயம் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்று, சான்றிதழுடன் சென்னை சென்றவர், பெருந்துறை வரவில்லை.


இந்நிலையில் நேற்று தனது பதவியை ராஜினமா செய்து விட்டு, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இதனால் அக்கட்சியினர் மட்டுமின்றி தொகுதி மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் பெருந்துறை தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.

பெருந்துறையில் ஆவேசம்​பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார், பதவியை ராஜினமா செய்து, தவெகவில் இணைந்ததை கண்டித்து, பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட் அருகில், அ.தி.மு.க., தொண்டர்கள் நேற்றிரவு, அவரின் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு அவருக்கு எதிராக கோஷமிட்டனர். உருவப்படத்தை செருப்பால் அடித்தும், காலால் மிதித்தும் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.

Advertisement