மதுரை மீனாட்சி கோயில் 'பார்க்கிங்'கில் சிறுவன் கொடூர கொலை: சித்திரை திருவிழாவில் தாக்கியதிற்கு பழிக்குப்பழி
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் தாக்கியதற்கு பழிக்குப்பழியாக 17 வயது சிறுவன், மீனாட்சி கோயில் 'பார்க்கிங்'கில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை வடக்குமாசிவீதியைச் சேர்ந்தவர் குபேந்திரன் என்ற குப்பை 17. நேற்றுமுன்தினம் இரவு மீனாட்சி கோயில் மல்டி லெவல் 'பார்க்கிங்'கில் தலை, முதுகு, முகம் உட்பட 23 இடங்களில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். குடல் வெளியே கிடந்தது. இதுதொடர்பாக திடீர்நகர் முத்துமணி 28, அவரது தம்பி ராஜ் 26, மேலவாசல் சதீஷ்குமார் 28, வடக்குமாசிவீதி ஹரிகிருஷ்ணன் 18, திடீர்நகர் முத்துக்குமார் 19, ஆகியோரை விளக்குத்துாண் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: மதுரை சித்திரை திருவிழா ஊர்வலத்தின்போது எதிர்பாராதவிதமாக குபேந்திரனுக்கும், முத்துமணிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமுற்ற குபேந்திரன், பாட்டிலால் முத்துமணியின் காதில் குத்தி காயம் ஏற்படுத்தினார். இதுதொடர்பாக திலகர்திடல் போலீசார் குபேந்திரனை கைது செய்தனர். காயம் ஆறுவதற்குள் குபேந்திரனை பழிதீர்க்க வேண்டும் என முத்துமணி சபதம் செய்தார்.
நேற்றுமுன்தினம் இரவு மீனாட்சி கோயில் மல்டி லெவல் 'பார்க்கிங்'கின் முதல் தளத்தில் குபேந்திரன் இருப்பதை அறிந்து முத்துமணி தனது கூட்டாளிகளுடன் சென்று பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, தரைதளத்தில் உடலை வீசிவிட்டு தப்பிச்சென்றனர். குபேந்திரன் தரப்பினர், நேற்று காலை யானைக்கல் பகுதியில் முத்துமணி தாயார் நடத்தும் பழக்கடையை சேதப்படுத்தினர். விசாரணை நடக்கிறது என்றனர்.
மேலும்
-
மோடி பிரதமராக பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டு நிறைவு; நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர்கள் பட்டியலில் 2வது இடம்!
-
அதிகாலை பயணத்தால் தொடரும் விபரீதம்; உபியில் பஸ் கவிழ்ந்து பயணிகள் 6 பேர் பரிதாப பலி
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் சரிவு; இன்றைய நிலவரம்!
-
ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்; ஏமாற்றும் அரசும் நிலைக்காது என்கிறார் இபிஎஸ்
-
கேபிள் கார் கோளாறால் அந்தரத்தில் தவித்த 300 பேர்; பத்திரமாக மீட்டது மீட்பு படை
-
சிறைக்குள் கஞ்சா பந்து வீசியது குறித்து விசாரணை