தாளவாடியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து சென்ற சிறுவன் உடல் மீட்பு
சத்தியமங்கலம்:காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் உடல் மீட்கப்பட்டது.
தாளவாடி மலைபகுதியில் நேற்று முன்தினம் மாலை கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக திகினாரை, கல்மண்டிபுரம், சிக்கள்ளி, எரகனள்ளி, பனகள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், 10க்கும் மேற்பட்ட இடங்களில், வெள்ளம் கரைபுரண்டோடியது.
திகினாரையை சேர்ந்த ரங்கராஜ் மகன் மதன் கார்த்திக், 6; அதே பகுதியில் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. தேடியபோது காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆசனுார் தீயணைப்பு நிலைய வீரர்களுடன் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவாகி விட்டதால் தேட முடியவில்லை. நேற்று காலை தேடும் பணியை தொடங்கினர். காலை, 11:00 மணியளவில் சிறுவனின் சடலம் புதருக்குள் சிக்கி இருந்தது. உடலை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.
மேலும்
-
அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்றால்... ஈரான் உடனான பேச்சு குறித்து டிரம்ப் சூசகம்
-
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு; கனடா பிரதமர் மார்க் கார்னி தகவல்
-
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு; 12 நாட்களில் 5வது முறையாக மாற்றம்
-
பாவூர்சத்திரத்தில் -மேம்பால பணியை விரைவில் முடிக்க கோர்ட் உத்தரவு
-
நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையை அளவிடும் பணி துவங்கியது
-
மதுரை மீனாட்சி கோயில் 'பார்க்கிங்'கில் சிறுவன் கொடூர கொலை: சித்திரை திருவிழாவில் தாக்கியதிற்கு பழிக்குப்பழி