புற்றுநோய் சிகிச்சை பயிற்சி மையம்

கோவை: பாரதியார் பல்கலை மற்றும் சீமென்ஸ் ஹெல்தினியர்ஸ் இந்தியா நிறுவனம் இணைந்து,  ‘பி.யு.,– வேரியன் சிகிச்சை திட்டமிடல் சிஸ்டம்’ எனும் புற்றுநோய் சிகிச்சை சார்ந்த பயிற்சி மையத்தை அமைக்க, ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

பல்கலை பதிவாளர் ராஜவேல், சிமென்ஸ் ஹெல்தினியர்ஸ் இந்தியாவின் வேரியன் பிரிவு மூத்த துணைத் தலைவர் மால்டி சச்தேவ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

நவீன பயிற்சி மையம் வாயிலாக, புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை திட்டமிடல், தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் சுகாதாரத் துறை நிபுணர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை திட்டமிடல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முன்னணி மையமாக ‘பி.யு., –வேரியன் டி.பி.எஸ். பயிற்சி மையம்’ உருவெடுக்கும் என பல்கலை பதிவாளர் ராஜவேல் தெரிவித்தார்.

Advertisement