வரதட்சணை கேட்டு பெண் அடித்து கொலை:கணவர், மாமியாருக்கு ஆயுள்
வேலுார்:வேலுார் அருகே, வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை அடித்து கொலை செய்து நாடகமாடிய கணவர், மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலுார் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வேலுார் மாவட்டம், கணியம்பாடி அடுத்த கீழ் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேலு என்கிற தணிகை வேல்,40; தனியார் பஸ் டிரைவர். இவருக்கும், வேண்டாராம்,29, என்பவருக்கும் கடந்த 2014 ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்நிலையில், வரதட்சணை கேட்டு மனைவி வேண்டாராமை, கணவர் வேலு மற்றும் மாமியார் தனம்மாள்,68, ஆகியோர் சித்ரவதை செய்து வந்தனர். இதற்கிடையே, 2015 ம் ஆண்டு வேண்டாராமுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், கடந்த 2016 ம் ஆண்டு வேண்டாராமை, வேலு மற்றும் தனம்மாள் ஆகியோர் அடித்து கொலை செய்தனர். மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினர்.
வேலுார் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, வேலு, தனம்மாள் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சித்ரா ஆகியோரை கைது செய்தனர்.
இந்தவழக்கு வேலுார் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. நீதிபதி கோபால கிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். வேலு மற்றும் தனம்மாள் ஆகியோரின் குற்றங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி, இருவருக்கும் ஆயுள் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும்
-
ஜே.சி.பி., உரிமையாளர்கள் சங்க கூட்டம்
-
பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
-
பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்
-
குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
-
விழுப்புரம் அருகே நெல் குவியலுடன் விவசாயிகள் தவிப்பு: கொள்முதல் நிலையம் முடங்கியதால் வேதனை
-
தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு