தீயசக்தி திமுகவிற்கு சிறிதும் இளைத்தது அல்ல தூய சக்தி தவெக: நயினார் நாகேந்திரன்
சென்னை: தீயசக்தி திமுகவிற்கு சிறிதும் இளைத்தது அல்ல தூய சக்தி தவெக என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
திருச்சியில் முதல்வர் பக்கம் பக்கமாக திரைப்பட வசனங்களை பேசிக் கொண்டிருந்த வேளையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பஸ்சுக்கு வழிவிடாமல் காரை நிறுத்தியதோடு, அதனைத் தட்டிக்கேட்ட அரசுப் பஸ் டிரைவரை போதையில் இருந்த தவெக நிர்வாகி ஒருவர் கத்தியால் வெட்டியதாக செய்தி வெளிவந்துள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாட்களுக்குள்ளேயே தினந்தினம் பெருகி வரும் ரவுடியிச ஆச்சரியக் குறிகளின் அடாவடித்தனமும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் தீயசக்தி திமுகவிற்கு சிறிதும் இளைத்தல்ல இந்த "தூய" சக்தி தவெக என்பதை தெளிவாக உணர்த்தி வருகிறது.
இந்த லட்சணத்தில், இவற்றையெல்லாம் கண்டுகொண்டு அடக்காது, அடுக்குமொழியில் வசனம் பேசுவதெல்லாம் முறையா?
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
தமது பதிவுடன் பஸ்சில் நடைபெற்ற சம்பவத்தின் 35 வினாடிகள் கொண்ட வீடியோவையும் அவர் இணைத்துள்ளார்.