மாநில செஸ் போட்டியில் வென்ற மாணவர் கவுரவிப்பு  

 புதுச்சேரி: மாநில அளவிலான செஸ் போட்டியில் சாதித்த கல்லுாரி மாணவர் கவுரவிக்கப்பட்டார்.

முத்தியால்பேட்டை, அண்ணல் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆரவமுதன் மகன் ரிஷி. கல்லுாரி மாணவரான இவர், அண்மையில் நடந்த புதுச்சேரி – தமிழ்நாடு மாநில அளவிலான ஓப்பன் செஸ் போட்டியில் முதலிடம் பெற்றார். அவருக்கு பரிசுகோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. அவரை முத்தியால்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் பாராட்டினார்.

Advertisement