பிரமோஸ் ஏவுகணை வாங்க வியட்நாம் ஒப்பந்தம்: இந்தோனேஷியா விரைவில் கையெழுத்து

1

புதுடில்லி: பிரமோஸ் ஏவுகணையை வாங்க இந்தியா உடன், வியட்நாம் ஒப்பந்தம் போட்டு உள்ளது. விரைவில் இந்தோனேஷியாவும் ஒப்பந்தம் போட உள்ளதாக பாதுகாப்புத்துறை செயலர் ராஜேஷ் குமார் சிங் கூறியுள்ளார்.


இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரமோஸ் ஏவுகணையை தயாரித்துள்ளன. இதனை நிலம், நீர் மற்றும் வான்பகுதி என மூன்று தளங்களில் இருந்தும் ஏவ முடியும். ஒலியை விட வேகமாக செல்லும் திறன் படைத்த இந்த ஏவுகணை , ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் திறன் பெற்றது. இந்த ஏவுகணையை வாங்க பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம் போட்டு உள்ளது.


இந்நிலையில் சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை செயலர் ராஜேஷ் குமார் சிங் பேசியதாவது: இந்த ஏவுகணையை வாங்க இந்தோனேஷியாவுடன் ஒப்பந்தம் போடும் நிலையில் உள்ளது. எனக்கு தெரிந்த வரை வியட்நாம், இந்த ஏவுகணை வாங்க ஒப்பந்தம் போட்டு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். நம்பிக்கைக்குரியவர்களுடன் மட்டுமே பாதுகாப்பு தொழில்நுட்பம் பகிரப்படுகிறது. ஆசியான் நாடுகளை இந்தியா நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இத்துடன் பிரமோஸ் ஏவுகணை தொடர்பான சாதனங்களும் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

Advertisement