மரக்கன்றுகள் நட்டு எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் விழிப்புணர்வு
சென்னை: காட்டாங்கொளத்துாரில் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக விளையாட்டு துறை சார்பில், 'கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாம் 2026' கடந்த ஒரு மாதம் நடந்தது. இதன் இறுதி நாள் நிறைவு விழா நேற்று நடந்தது.
இந்த கோடை பயிற்சி முகாமில், 50க்கும் அதிகமான மாணவ - மாணவியர் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறன்களை மேம்படுத்திக் கொண்டனர்.
இந்த முகாம், விளையாட்டு துறையில் சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாம் நடைபெற்ற இந்த ஒரு மாத காலத்தில், சிறந்த நிபுணர்களைக் கொண்டு பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் மாணவர்களுக்கு தொழில்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு நாளில் மாணவர்கள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு, சிறப்புப் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement