உதடு வறண்டிருந்தாலும் 'மேட் லுக்' மிஸ் ஆகாது
லாங் லாஸ்டிங், பளபளப்பு இல்லாத கிளாசி லுக் என்பதால் பெண்களுக்கு 'மேட் லிக்விட் லிப்ஸ்டிக்' மீது எப்போதும் ஒரு தனி க்ரேஸ் உண்டு.
ஆனால், 'என் உதடு ரொம்ப ட்ரையா இருக்கே... மேட் லிப்ஸ்டிக் போட்டா இன்னும் வறண்டு, சுருங்கி போய்விடுமே' என கவலைப்பட வேண்டாம் என்கிறார் அழகுகலை நிபுணர் ரம்யா.
வறண்ட உதடு கொண்டவர்களுக்கும் மேட் லுக் சாத்தியம்தான். மேட் லிப்ஸ்டிக் தேர்வு செய்யும்போது, அதில் மாய்ஸ்சரைசிங் அம்சங்கள் உள்ளனவா என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.
உதடுகளை உலரச் செய்யாமல், அதே நேரத்தில் மேட் பினிஷ் தரக்கூடிய 'ஹைட்ரேட்டிங்', 'மாய்ஸ்சரைசிங்' அல்லது 'கம்போர்ட் மேட்' (Comfort Matte) லிக்விட் லிப்ஸ்டிக்குகளைத் தேர்வு செய்வது சிறந்தது.
லிப்ஸ்டிக்கில் ஆர்கன் ஆயில் (Argan Oil) , ஜோஜோபா ஆயில் (Jojoba Oil) , ஷியா பட்டர் (Shea Butter) , வைட்டமின் இ போன்ற ஈரப்பதம் தரும் பொருட்கள் உள்ளனவா என்பதைப் பார்க்க வேண்டும். இவை உதட்டின் இயல்பான ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும்.
உதட்டில் வறட்சித் தன்மை அதிகமாக இருந்தால், 'அல்ட்ரா மேட்' (Ultra Matte) அல்லது 'டெட் மேட்' (Dead Matte) வகைகளைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக 'வெல்வெட் மேட்' (Velvet Matte) அல்லது 'சாடின் மேட்' (Satin Matte) வகைகளைத் தேர்வு செய்யலாம். இவை உதட்டைப் பாதிக்காமல் மென்மையான மேட் தோற்றத்தை வழங்கும்.
அதேபோல், உதட்டில் லிப்ஸ்டிக் போட்டதே தெரியாத அளவுக்கு மெலிதாகவும் லேசாகவும் இருக்கும் 'மூஸ்-பேஸ்டு' (Mousse-Based) லிப்ஸ்டிக்குகள் வறண்ட உதடுகளுக்கு ஏற்றவை.
- ப.சுகன்யா