கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு

கோத்தகிரி, ஜூன் 1-–



கோத்தகிரி கிளை நூலகத்தில், மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி நிறைவு விழா நடந்தது.

நீலகிரி மாவட்ட பொது நூலகத்துறை, கோத்தகிரி கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், கோத்தகிரி கிளை நூலகத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில், முகாம் நிறைவு விழா நடந்தது.

வாசகர் வட்ட தலைவர் லிங்கன் தலைமை வகித்தார்.

மாவட்ட நூலக அலுவலர் கிளமெண்ட் கலந்து கொண்டு, முகாமின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதில், கோத்தகிரி குடிமக்கள் மன்ற தலைவர் வக்கீல் முருகன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ, நகராட்சித் தலைவர் ஜெயக்குமாரி ஆகியோர் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

கிளை நூலகர் அமுதா வரவேற்றார். வாசகர் வட்ட நிர்வாகி ராஜ்குமார் நன்றி கூறினார்.

Advertisement