வாழை மதிப்பூட்டல் பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வாழை மற்றும் கறிவேப்பிலையில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

வரும் 3, 4ம் தேதிகளில் நடக்கும் பயிற்சியில், வாழைப்பொடி, வாழை ஐஸ்கிரீம் மிக்ஸ், வாழைப்பழ ஜாம், வாழைப்பூ ஊறுகாய், வாழைத்தண்டு மிட்டாய், வாழை சத்து மாவு, கறிவேப்பிலை பொடி, கறிவேப்பிலை பேஸ்ட், கறிவேப்பிலை சாத பொடி தயாரிக்க கற்பிக்கப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள் https://tnau.ac.in/site/aecri-cbe/department-of-pht-about-department/ என்ற இணைய பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ரூ.1,770 கட்டணத்தை, பயிற்சி முதல் நாளன்று யு.பி.ஐ., வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும். விவரங்களுக்கு: 94885 18268.

Advertisement