கார் மோதி அடையாளம் தெரியாத மூதாட்டி பலி
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே கார் மோதி அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சித்தானங்கூர் எம்ஹவுஸ் சர்ச் அருகே நேற்று இரவு 7:00 மணியளவில் 65 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத மூதாட்டி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ கார் மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement