மயிலம் தமிழ்க் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

மயிலம்: மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்த் துறை சார்பில் 2 நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி வளாகத்தில் நடந்த கருத்தரங்கிற்கு மயிலம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். இலங்கை யாழ்ப்பாணம் உலக தமிழ் பண்பாட்டு மையம் இயக்குனர் வாசுதேவன், திருவண்ணாமலை சிவக்குமார், முன்னாள் முதல்வர் ஞான ஜோதி சரவணன் துவக்க உரையாற்றினர். சேலம் சைலாபுரி ஆதீனம் தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சிறப்புரையாற்றினார். மயிலம் ஆதீனம் இருபதாம் பட்ட சுவாமிகள்  திருவண்ணாமலை சிவக்குமார் எழுதிய திருவாசகம் பத்து என்னும் நுாலை வெளியிட்டார். கல்லுாரி மாணவிகள் சரண்யா, கீர்த்தனா, சூர்யா உட்பட பலர் பேசினர்.

கருத்தரங்கில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், நடனம் உள்ளிட்ட  பல நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து நடந்த ஆய்வரங்கத்தில்  உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த தமிழ் அறிஞர்கள் கட்டுரைகளை வாசித்தனர்.

அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை மயிலம் ஆதீனம் 20ம் பட்ட சுவாமிகள் வழங்கினார்.

கடையநல்லுார் அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் வேலம்மாள் நன்றி கூறினார்.

Advertisement