பாட்டி இறுதிச்சடங்கில் பேரனுக்கு கத்திக்குத்து

தேவதானப்பட்டி:புல்லக்காபட்டியில் பாட்டி இறப்புக்கு நீர்மாலை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஐ.டி., பணியாளர் நரசிம்மராஜ் 36.க்கு கத்திக்குத்து விழுந்தது.

பெரியகுளம் ஒன்றியம் புல்லக்காபட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் நரசிம்மராஜ். சென்னை ஐ.டி., கம்பெனி பணியாளர். கடந்த மாதம் புல்லக்காபட்டியில் இவரது பாட்டி வள்ளியம்மை உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அப்போது நரசிம்மராஜ் அவரது குடும்பத்தினர் கவனித்துள்ளனர். இந்த செயல் வள்ளியம்மையை முன்பு கவனித்த நரசிம்மராஜ் மாமா மகாலிங்கத்திற்கு பிடிக்கவில்லை. இதனால் இரு தரப்பினருக்கிடையே முன் விரோதம் ஏற்பட்டது. இரு தினங்களுக்கு முன் வள்ளியம்மை இறந்தார். நீர் மாலை எடுக்கும் போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மகாலிங்கம் தூண்டுதலில் நரசிம்மராஜ் தந்தை நெப்போலியனை, பிச்சைமுத்து தாக்கினார். இதனை தட்டிக்கேட்ட நரசிம்மராஜை, மகாலிங்கம் மகன் தங்கப்பாண்டி கத்தியால்

குத்தினார். தடுக்க வந்த நரசிம்மராஜ் மைத்துனர் திரிபுவனுக்கும் கத்தி குத்து விழுந்தது. மகாலிங்கம், பிச்சைமுத்து, ஐயப்பன், ஈஸ்வரன் ஆகியோர் இருவரையும் கைகளால் தாக்கினர். காயமடைந்த நரசிம்மராஜ், திரிபுவன் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.நரசிம்மராஜ் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் தங்கப்பாண்டி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

--

Advertisement