கால்நடை தண்ணீர் தொட்டி சிறுவாபுரியில் அமையுமா?

சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலை சுற்றியுள்ள வெளிப்புற பகுதிகளில், உணவு, பூமாலை, பழங்களின் கழிவுகள் மற்றும் பக்தர்கள் வழங்கும் உணவுக்காக, ஏராளமான ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிகின்றன.

கோடை வெயிலின் தாக்கத்தால், தாகத்தை தணிக்க, அங்குள்ள தண்ணீர் குழாய்களை வட்டமிட்டபடி கால்நடைகள் வலம் வருகின்றன. அதன் தேவையை அறிந்த பக்தர்கள் சிலர், அவை தண்ணீர் பருக உதவுகின்றனர்.

கால்நடைகளின் சிரமம் கருதி, சிறுவாபுரி கோவில் பகுதி அருகே, கால்நடை தண்ணீர் தொட்டி அமைக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சதானந்தன், கும்மிடிப்பூண்டி.

Advertisement