பீஹார் மருத்துவமனையில் தீப்பற்றியதில் 5 பேர் பலி; 20 பேர் படுகாயம்
பாட்னா: பீஹார் மாநிலம் முசாபர்பூர் தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் 5 பேர் உயிரிழந்தனர்.
பீஹாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (ஜூன் 04) அதிகாலை தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் தீயில் பலத்த காயமுற்று, புகை மூட்டத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு நோயாளிகள் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். மின்கசிவே தீ விபத்திற்குக் காரணம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து தீயணைப்பு படையினர் கூறியதாவது: மருத்துவமனையில் அதிகாலை 3.55 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன் பிறகு நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றோம். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
மேலும் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. தற்போது அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது, அனைத்து நோயாளிகளும் மீட்கப்பட்டுவிட்டனர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (11)
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
04 ஜூன்,2026 - 13:01 Report Abuse
Power of double engine sarkar... 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
04 ஜூன்,2026 - 11:53 Report Abuse
கட்சியை கடந்து வடமாநிலங்களில் ஊழல் அதிகம். மனிதாபிமானம் குறைவு. இப்போது சில மாநிலங்களை அரசியல் மாற்றம் சில மாற்றத்தை கொண்டு வருகிறது.
பீகாரின் ஊழல் தமிழகத்தை போல 4 மடங்கு. இது தனியார் ஆஸ்பத்திரி என்பதால் அரசு MLA களின், அதிகாரிகளின் ஊழல் வாய்ப்பு இல்லை. அதிக அளவு வெயிலால் பாதிக்கப்படும் மாநிலங்களில் இதுவும் ஒன்று. அதனால் ஏற்பட்ட விபத்தாக இருக்கும். 0
0
SULLAN - chennai,இந்தியா
04 ஜூன்,2026 - 13:05Report Abuse
மனிதாபிமானம் குறைவிற்கு மதமும் ஒரு காரணம் ஊழல் முறைகேட்டிற்கு கா கட்சியின் எழுச்சியே காரணம். 0
0
Reply
nisar ahmad - ,
04 ஜூன்,2026 - 11:40 Report Abuse
சாபம் 0
0
Reply
kulanthai kannan - ,
04 ஜூன்,2026 - 10:24 Report Abuse
துர்மரணங்களில் இந்தியாவுக்கே முதலிடம். 0
0
Reply
SULLAN - chennai,இந்தியா
04 ஜூன்,2026 - 08:30 Report Abuse
இதுகூடவா தெரில ஊழல் முறைகேடுகள் நிறைந்த ஆட்சி நிர்வாகம் ...எல்லா தவறுகளையும் மறைச்சு நடத்துற கேவலமான அரசியல்வியாதிகள். வாழ்க ஜன நாயகம். 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
04 ஜூன்,2026 - 07:42 Report Abuse
அதென்ன திமிங்கி பாஜ அதிகாரத்தில் இருக்கும் மாநிலங்களில் மட்டும் ???? 0
0
Reply
Jayaraman - ,
04 ஜூன்,2026 - 07:19 Report Abuse
மின் கசிவு ஏற்படாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யாராவது இந்த பகுதியில் எழுதுங்கள். 0
0
Arul. K - Hougang,இந்தியா
04 ஜூன்,2026 - 08:44Report Abuse
01 தரமான கம்பிவடம் quality wires
02 தரமான கருவிகள் quality Bushbars & Circute Breaker
03 மாதம்தோறும் நேரடி ஆய்வு monthly visual inspection & random cross inspection
04 ஊழியர்களின் ஆய்வறிக்கையையின் படி மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்
05 அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட குறைவான மின் உபயோகம்
களத்தில் நடப்பது
01 தரமற்ற கம்பிவடம்
02 தரமற்ற கருவிகள்
03 ஆய்வு செய்யாமலே சான்றளிப்பது
04 பணம் சேமிப்பதாக நினைத்துக்கொண்டு ஊழியர்களின் ஆய்வறிக்கைக்கு நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடுவது
05 அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட அதிகமான மின் உபயோகம் over load 0
0
SANKAR - ,
04 ஜூன்,2026 - 09:00Report Abuse
excellent meaningful and educative post.congrats 0
0
SULLAN - chennai,இந்தியா
04 ஜூன்,2026 - 09:00Report Abuse
ஊழல் முறைகேடுகள் இல்லாமல் மின் சாதனங்களை சரியான முறையில் பராமரிக்க பட வேண்டும். மின் மாற்றிகள் அதிக வெப்பம் ஏற்படா வண்ணம் பாது காக்கப்பட வேண்டும். 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement