(சேர்க்கவும்) நுாற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரம்: செய்யது அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் அப்துல்லாவின் நுாற்றாண்டு விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நிர்வாக அறங்காவலர் டாக்டர் பாபு அப்துல்லா தலைமையில் நடந்தது. அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர் செய்யதா அப்துல்லா, செல்லத்துரை அப்துல்லா, டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரத்தில் செய்யது அம்மாள் அறக்கட்டளை சார்பில் மருத்துவமனை, மேல்நிலைப்பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி, இன்ஜினியரிங் கல்லுாரி, கலை அறிவியல் கல்லுாரி, நர்சிங் பள்ளி மற்றும் நர்சிங் கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் அப்துல்லாவின் நுாற்றாண்டு விழா நடப்பு ஆண்டில் கொண்டாடப்படவுள்ளது. இதையயடுத்து பல்வேறு விழாக்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர்கள் ராசிகா, ஷிபா, அட்டிப், ஷானாஸ் பரூக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.–––