இதே நாளில் அன்று

ஜூன் 6:


தஞ்சாவூர் மாவட்டம், அரித்துவாரமங்கலத்தில், வாசுதேவ ரகுநாத ராஜாளியார் - ஆயி அம்மாள் தம்பதியின் மகனாக, 1870, நவம்பர் 17ல் பிறந்தவர், கோபாலசாமி ரகுநாத ராஜாளியார்.

இவர், பச்சைக்கோட்டை விஞ்சிராயரிடம் குருகுல கல்வி, கும்பகோணத்தில் மெட்ரிகுலேஷன் படிப்பு, தஞ்சை எஸ்.பி.ஜி., கல்லுாரியில் பட்டப்படிப்பை முடித்தார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளையும், யோகா, ஜோதிடம், சித்த மருத்துவம், இசை உள்ளிட்டவற்றையும் கற்றார்.

ஓலைச்சுவடிகளை சேகரித்து, உ.வே.சாமிநாத அய்யர், ந .மு.வேங்கடசாமி நாட்டார், பரிதிமாற் கலைஞர், மு.ராகவையங்கார் உள்ளிட்ட தமிழறிஞர்களின் ஆராய்ச்சிக்காக தந்தார். குன்னுாரில், தொல்காப்பியருக்கு சிலை வைத்தார்.

மதுரையில் நான்காம் தமிழ் சங்கம், தஞ்சை கரந்தை தமிழ் சங்கம், சென்னை பல்கலையில் தமிழ் துறை தொடங்க காரணமாக இருந்தார். இந்திய தேசிய காங்., கமிட்டி உறுப்பினராக இருந்து, கோவில் திருப்பணிகளுடன் பள்ளி, மருத்துவமனைகளை கட்டினார்.

தன் சேவைகளுக்காக, சென்னை, அடையாறு பிரம்மஞான சபையின் கவுரவ பட்டம் பெற்ற இவர், தன் 49வது வயதில், 1920ல் இதே நாளில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!

Advertisement