10 லட்சத்தை கடந்தது அண்ணாமலை கட்சியின் புதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை; தொடர்ந்து குவிகிறது ஆதரவு
நமது நிருபர்
அண்ணாமலை இன்று (ஜூன் 05) மதியம் 12 மணிக்கு தொடங்கிய இயக்கத்தில் பதிவு செய்து இணைந்துள்ளவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.
பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜ தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. புதிய பாதை, புதிய இயக்கம், புதிய பரிமாணத்தோடு, பார்வையோடு ஆரம்பிக்க வேண்டும் என்பது என் ஆசை. தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அதில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்த அண்ணாமலை இன்று (ஜூன் 05) இது நம்ம இயக்கம் (we the leaders) என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார்.
இருந்தனர்.
தற்போது 10 லட்சத்தை கடந்தது. இரவு 10.20 மணி நிலவரப்படி 10 லட்சத்து 7 ஆயிரத்து 187 பேர்
பதிவு செய்து இணைந்துள்ளனர். ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு, அது தற்போது நிரூபணம் ஆகும் வகையில் அண்ணாமலையில் இயக்கத்தில் இளைஞர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வேகமாக இணைந்து வருகின்றனர்.
அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைய லிங் இதோ!
https://wetheleader.org/
@block_P@
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது.
இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் லட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.block_P
வெளியேறும் ஆதரவாளர்கள்!
அண்ணாமலை விலகலைத் தொடர்ந்து பா.ஜ.,வில் பல்வேறு மாவட்டங்களிலும் நிர்வாகிகள் வெளியேற துவங்கிவிட்டனர். பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் விஷ்ணுபிரசாத் , சென்னை நிர்வாகி வினோத், ராமநாதபுரம் நிர்வாகி செந்தில்குமார் உட்பட பலர் வெளியேறி உள்ளனர்.
கோவை தெற்கு மாவட்ட பாஜ தலைவர் சந்திரசேகர் ராஜினாமா செய்துள்ளார். ஒட்டு மொத்த மாவட்ட நிர்வாகிகளும் அண்ணாமலை கட்சியில் ஐக்கியம் ஆகி இருக்கின்றனர். பாஜ மாநில துணைத்தலைவரான கரு. நாகராஜன், அந்த கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவரும் அண்ணாமலையின் புதிய கட்சியில் இணைவதாக தெரிவித்துள்ளார்.