சச்சின் யாதவ் 8வது இடம்: டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில்

ரோம்: டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் சச்சின் யாதவ் 8வது இடம் பிடித்தார்.

இத்தாலி தலைநகர் ரோமில், டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் சச்சின் யாதவ் 26, உட்பட 10 பேர் பங்கேற்றனர். முதல் முறையாக டைமண்ட் லீக் போட்டியில் பங்கேற்ற சச்சின், தனது முதல் வாய்ப்பை 'பவுல்' செய்தார். பின் எழுச்சி கண்ட இவர், இரண்டாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 79.18 மீ., எறிந்தார். அடுத்த மூன்று வாய்ப்பில் 77.02, 76.62, 75.54 மீ., மட்டுமே எறிந்த இவர், ஒட்டுமொத்தமாக 8வது இடம் பிடித்தார். கடந்த ஆண்டு டோக்கியோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 86.27 மீ., எறிந்து 4வது இடம் பிடித்த இவர், தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்திருந்தார்.
இலங்கையின் ருமேஷ் தரங்கா பதிரகே 23, அதிகபட்சமாக 92.62 மீ., எறிந்து முதலிடம் பிடித்தார். ஈட்டி எறிதலில், 90+ மீ., எறிந்த 4வது ஆசிய வீரர், 28வது சர்வதேச வீரரானார். அடுத்த இரு இடங்களை கிரேனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (83.91 மீ.,), அமெரிக்காவின் கர்டிஸ் தாம்ப்சன் (83.89) தட்டிச் சென்றனர்.

Advertisement