போலீஸ் செய்தி
நீதிமன்றத்தில் ஆஜராகாத 3 பேர் கைது
சாத்துார், ஜூன் 6-
சாத்துார் ஆண்டாள்புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் 25.இவர் மீது சாத்துார் ஜே.எம்.2நீதிமன்றத்தில் கஞ்சா வழக்கு நடந்து வருகிறது. இதே போல் சாத்துார் படந்தால் வசந்தம் நகரை சேர்ந்தவர் அஜித் 26. ஜே.எம்.2 நீதிமன்றத்தில் இவர் மீது போக்சோ வழக்கு நடந்து வருகிறது. சாத்துார் கே.கே.நகரை சேர்ந்தவர் சுரேஷ் 42. பெண் ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். ஜே.எம்.2 நீதிமன்றத்தில் இவ் வழக்கு நடந்து வருகிறது. இவ் வழக்குகளில் ஜாமினில் வெளியே வந்த இவர்கள் தங்களது வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து மூவரையும் நேற்று சாத்துார் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுபடி அவர்கள் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.