வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்: மதுரை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மீதான அவமதிப்பு வழக்கை, வாபஸ் பெறக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை ஐகோர்ட் கிளை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெறக்கோரி நேற்று மாநிலம் தழுவிய பணி புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர். மூத்த வழக்கறிஞர் பழனிமுத்து தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
வழக்கறிஞர்கள் விஸ்வநாதன், அருள்குமார், அசோக்குமார், குமரகுரு, அய்யாசாமி, சங்கரய்யா, ஆனந்தகண்ணன், சிவாஜிசிங், குபேரமணி, ராஜ்மோகன், மோகன்ராஜ், காசிவிசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த ஐகோர்ட் கிளை நீதிபதியை கண்டித்து கோஷமிடப்பட்டது.