மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை

புதுச்சேரி: மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி, சண்முகாபுரம் மாணிக்க செட்டியார் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 33. இவரது மனைவி சிவரஞ்சினி. கடந்த 2ம் தேதி இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, சிவரஞ்சினி அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.

இதனால் மணிகண்டன் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் மணிகண்டனின் உறவினர்கள் நேற்று முன்தினம் வீட்டிற்கு சென்று பார்த்தேபோது, அவர் வீட்டின் அறையில் துாக்கில் தொங்கினார். அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்ததை உறுதி செய்தார். புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement