பொற்சோதிநாதர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், ஒழையூரில் அறம் வளர்த்த நாயகி உடனுறை பொற்சோதிநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 5ம் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது.
நேற்று காலை 6:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும். காலை 9:45 மணிக்கு கலசம் புறப்பாடும், தொடர்ந்து கோவில் கோபுரத்திற்கும், மூலவர் சன்னிதி, பரிவார மூர்த்திகளுக்கும் வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
காலை 11:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்டெக் கண்காட்சியில்... 'மேட் இன் இந்தியா' இயந்திரங்கள் தொழில்துறையினரை ஈர்க்கும் கண்காட்சி இன்று நிறைவு
-
ஆபாச பேச்சு: இருவர் கைது
-
பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
-
மரக்கன்றுகளை நட்ட பா.ஜ.,வினர்
-
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று துவக்கம்
-
பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்கிட ஆட்டோ தொழிலாளர் சங்கம் கோரிக்கை
Advertisement
Advertisement